இந்திய கிரிக்கெட்

நல்லா விளையாடிட்ட ஆனா 300 ரன்ன மிஸ் பண்ணிட்டியே.. கில்லுக்கு வந்த ஸ்பெஷல் மெசேஜ்.. உணர்வுபூர்வமான சம்பவம்

நேற்று தான் இரட்டை சதம் அடித்திருந்தாலும் மேற்கொண்டு விளையாடி முச்சதம் அடித்திருக்க வேண்டும் என வந்த மெசேஜ் குறித்து இந்திய கேப்டன் கில் மிகவும் உணர்ச்சிவசையப்பட்டு பேசி இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கில் நிலைத்து நின்று விளையாடி 269 ரன்கள் குவித்து பல சாதனைகளை படைத்தார். ஆசியா தாண்டி வெளிநாட்டு மண்ணிலும் தன்னால் ரன் குவிக்க முடியும் என நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

தவறிய முச்சதம்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வீரர் இந்த சேவாக்குக்கு பிறகு முச்சதம் எடுப்பதற்கான வாய்ப்பு கில்லுக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. இந்த நிலையில் உடன் விளையாடிய கடைசி பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் மேல இருந்த காரணத்தினால், அடுத்து பேட்டிங் செய்ய பவுலர்கள் வந்ததால், கில் அதிரடியாக விளையாட முற்பட்டு வெங்கட் இழந்துவிட்டார்.

இந்த நிலையில் அவரது தாய் மற்றும் தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ” மகனே உன்னுடைய பேட்டிங்கை பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது. உன்னை கடவுள் ஆசிர்வதிப்பார்” என தாய் கூறியிருந்தார். அவரது தந்தையின் வாழ்த்துச் செய்தியில் ” என் மகனே இன்று நீங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நீங்கள் நேற்று விளையாடியதைப் பார்க்க அண்டர் 16 அண்டர் 19ல் தாங்கள் விளையாடியதைப் போலவே உணர்ந்தேன். மனதிற்கு மிகவும் அமைதியாகவும் பெருமையாகவும் இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்

தன்னுடைய தாய் மற்றும் தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி கில்லுக்கு மிகவும் உணர்வுபூர்வமானதாக அமைந்திருக்கிறது. இது குறித்து பேசி இருக்கும் அவர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : கில் இரட்டை சதம் அடித்ததும்.. கேப்டனுக்காக சிராஜ் செய்த காரியம்.. கேமராவில் சிக்க ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதுகுறித்து கில் கூறும் பொழுது “நான் வளர்ந்த பிறகு என் அப்பாவுக்காக முழுமையாக கிரிக்கெட் விளையாடினேன். அதாவது நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணம் என் அப்பாதான். அவர் என்னுடைய சிறந்த நண்பராக இருக்கிறார். நான் அவருடன் இணைந்து பயிற்சி செய்வேன். நான் கிரிக்கெட் குறித்து இவர்களிடமிருந்து வரும் செய்திகளை எடுத்துக் கொள்வேன். மேலும் முச்சதத்தை அடித்திருக்க வேண்டும் என என் தந்தை கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shubman Gill