தென் ஆப்பிரிக்கா கூட ஜெயிச்சிருந்தாலும் எதுவும் மாறாது.. எங்களுக்கு இப்ப இது தேவை – கில் பேட்டி

0
2
Gill

இந்திய டெஸ்ட் அணி தொடர் வெற்றிகளை பெறுவதற்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் முக்கியமான கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். தற்போது இந்திய டி20 அணியில் நீக்கப்பட்ட நிலையில், தன் கைகளில் இருக்கும் வடிவங்களில் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

நான் சொன்னது இதுதான்

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் பொழுது ” நாங்கள் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் நாங்கள் தயாராவதற்கு எங்களுக்கு சரியான நேரம் இருக்கவில்லை. எனவே நான் ஒரு யோசனையை பரிந்துரை செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னவென்றால் எங்களுக்கு ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக தயாராக அதற்கு நேரம் வேண்டும்”

“நீங்கள் இந்தியாவில் ஒரு தொடரில் விளையாடிவிட்டு, அடுத்த நான்காவது நாளில் நீங்கள் இன்னொரு வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியை விளையாட வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. குறிப்பாக நீங்கள் நீண்ட நாட்கள் ஒரு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்பொழுது இது கடினமானது”

- Advertisement -

வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்காது

“நாங்கள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால் இதை கூறவில்லை. வெற்றி பெற்று இருந்தாலும் இதில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருந்திருக்காது. உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தயாராவதற்கு நேரம் வேண்டும்”

இதையும் படிங்க : நியூசி ODI தொடர்.. சச்சினுக்கு விராட் கோலி காலிஸ்க்கு ரோகித் சர்மா.. உடைய காத்திருக்கும் சாதனைகள் – முழு பட்டியல்

“எனக்கு தயாரிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிய கோப்பை அடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் கூட எங்களுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை. எனவே டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு குறைந்தது இரண்டு வார காலம் அவகாசம் தேவை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -