சும்மா பண்ணல.. சமி இப்படி கொண்டாட காரணம் இருக்கு.. சுப்மன் கில் வெளியிட்ட ருசிகர தகவல்.!

0
30608

13-வது உலகக்கோப்பை தொடரின் 33-வது போட்டியில் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றதோடு முதல் அணியாக உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டிகளுக்கும் தகுதி பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணிந்தார். இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 55 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அவர்தான் இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவின் காயத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சமீ கடந்த மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

இந்நிலையில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு பந்தை தன் தலையில் வைத்து சுற்றி தேய்ப்பது போன்று சைகை செய்து காட்டினார். இது முதலில் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சுப்மன் கில், முகமது சமி அவ்வாறு செய்ததற்கான காரணத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். பொதுவாகவே சமி எப்போது விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் பெரிதாக கொண்டாட மாட்டார். ஆனால் இந்த முறை அவர் இவ்வாறு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து தொலைக்காட்சி நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சுப்மன் கில்” அந்த செய்கை எங்களது பந்து வீச்சு பயிற்சியாளரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் செய்தது. முகமது சமி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் பயிற்சியாளரின் கவனத்தை ஈர்க்க தன்னுடைய தலையில் பந்தை வைத்து தேய்த்து சைகை செய்தார். எங்களது பந்து வீச்சு பயிற்சியாளருக்கு தலையில் முடி இருக்காது. அதனை விளையாட்டாக சுட்டிக் காட்டும் வகையில் நகைச்சுவையுடன் முகமது சமி அவ்வாறு செய்து காட்டினார் என விளக்கம் அளித்திருக்கிறார் சுப்மன் கில்.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி எப்போது 50-வது சதத்தை அடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியுடன் போட்டியின் போது களமிறங்கிய சமி தனது திறமையான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் திருப்பி இருக்கிறார். குறிப்பாக கடந்த போட்டியில் இவர் பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக இவர் வீசிய மேஜிக் ஸ்பெல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 14 ஆட்டங்களில் ஆடியிருக்கும் சமி 45 விக்கெட் வீழ்த்தி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான்கு போட்டிகளில் விளையாடிய முகமது சமீ 14 விக்கெட் வீழ்த்தினார். தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் மூன்றே போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -