ஐபிஎல் 2025.. விராட் கோலிதான் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனா? பயிற்சியாளர் கூறிய முக்கிய தகவல்.. முழு விபரம்

0
118

வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் எதிர்பார்ப்புக்குரிய அணியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் அடுத்த கேப்டன் குறித்து அதன் பயிற்சியாளர் ஆன்ட்டி பிளவர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை ஜெய்க்காவிட்டாலும் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு என்பது எப்போதும் குறையாத வகையில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இந்திய அணியின் ஜாம்பவான் வீரராக திகழும் விராட் கோலி. தன்னால் முடிந்த அனைத்தையும் பெங்களூர் அணிக்காக கொடுத்து அவரது ஆற்றலை அப்படியே ரசிகர்களுக்கும் கடத்துகிறார். இதனால் பெங்களூர் அணியின் ஆதரவு என்பது ரசிகர்களிடத்தில் எப்போதும் குறையாத நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்ட டு பிளஸ்சிஸ் இந்த முறை பெங்களூர் அணி அவரது வயதின் காரணமாக ஏலத்தில் எடுக்கவில்லை. மேலும் தற்போது எடுக்கப்பட்ட வீரர்களில் யாரும் கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருக்கக்கூடிய வீரராக இல்லை என்பதால் திரும்பவும் பெங்களூர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த பெங்களூர் அணியின் கேப்டன் குறித்து அதன் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய கருத்து

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் ஒரு முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தொடங்கப் போவது ஒரு புதிய சகாப்தம். மேலும் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அறிவிப்பு நிறைவேற்றப்படும் என்பதில் பெங்களூர் அணி கவனம் செலுத்துகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கலாம். ஆனால் அடுத்த கேப்டனிற்கான விவாதம் இன்னும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் அஸ்வினை அவமானப்படுத்தினார்.. ஆனா கண்டிப்பா ஒரு நாள் அஸ்வின் பேசுவார் – மனோஜ் திவாரி பேட்டி

அதாவது அடுத்த பெங்களூர் அணியின் கேப்டனுக்கு உரையாடல் இன்னும் நிகழவில்லை என்று பயிற்சியாளர் தெரிவித்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 21ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணியை நன்றாகவே வழி நடத்தினார். அவரது தலைமையில் பெங்களூர் அணி இறுதி போட்டி வரை சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயிற்சியாளர் கூறியது போல கேப்டன் பதவி அடுத்த மூன்று வருடங்களுக்கானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்து இருப்பதால் விராட் கோலி நியமிக்கப்படுவாரா? அல்லது வேறு இளம்வீரர்க்கு வாய்ப்பு போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -