இந்திய கிரிக்கெட்

ஆகாஷ் தீப்பால் கடுப்பான கில்.. 300 ரன் வாய்ப்பை தவறவிட்டார்.. களத்தில் என்ன நடந்தது?.. முழு விபரங்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. மேலும் நீண்ட வருடங்கள் கழித்து இந்தியா பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை கேப்டன் கில் தவறவிட்டார்.

- Advertisement -

நேற்று போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 டிக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டு செஷன்கள் முழுமையாக விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ரன்கள் சேர்த்து இருக்கிறது. கேப்டன் வில் 269 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கடுப்பாக்கிய ஆகாஷ் தீப்

இந்த போட்டியில் கேப்டன் கில் உடன் இணைந்து 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து அடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பேட்டிங் செய்வதற்காக உள்ளே வந்தார். இவர் ஓரளவிற்கு பேட்டிங் செய்யக்கூடிய திறமை இருக்கக் கூடியவர்.

இந்த நிலையில் கேப்டன் கில் அடுத்த ஓவரையும் தானே விளையாடுவதற்காக ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுக்க அழைத்தார். அப்பொழுது ஆகாஷ் தீப் சூழ்நிலையை உணர்ந்து ரன்னுக்கு முன்கூட்டியே தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் தயாராக இல்லாமல் ஒருவழியாக ஓடி விழுந்து தப்பித்தார். இது கேப்டன் கில்லி கோபப்படுத்த அவர் களத்திலேயே ‘உன்னால் முன்கூட்டியே தயாராக இருக்க முடியாதா?’ என்று திட்டினார்.

- Advertisement -

கில் செய்த தவறு

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. மேலும் ஆகாஷ் தீப் ஓரளவுக்கு பேட்டிங் செய்வார். மேலும் நைட் வாட்ச்மேன் ஆக வரும் அளவுக்கு முகமது சிராஜிக்கு தற்காப்பு ஆட்டம் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் கடுமையாக தற்காப்பு பேட்டிங் பயிற்சி செய்தார்.

இதையும் படிங்க : சச்சின் விராட்டின் அரிய 2 சாதனைகள்.. கில் பேட்டிங்கில் தூள் தூளானது.. புதிய வரலாறு இங்கிலாந்தில் பிறந்தது

எனவே இந்த காரணத்தால் கேப்டன் கில் சிங்கிள் ரொட்டேட் செய்து இருவருடனும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எளிதாக முச்சதம் அடித்து சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் கேப்டன் வில் இவர்களை நம்பாமல் தானே விளையாட முயற்சி செய்து 269 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்துவிட்டார். அவர் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருந்தாலும் இது ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றி விட்டது என்று கூறலாம்!

- Advertisement -
Published by
Tags: Shubman Gill