10 சிக்ஸ் 7 பவுண்டரி.. சீசனின் 3ஆவது சதம்.. மும்பையை கதிகலங்க விட்டு ஏலியன் லெவல் பேட்டிங் ஆடிய சுப்மன் கில்! – மும்பை அணிக்கு 234 ரன்கள் இலக்கு!

0
1499

இரண்டாவது குவாலிபயரில் 129 ரன்கள் குவித்து குஜராத் அணியை இமாலய ஸ்கூல் ஏற்றுவதற்கு உதவியுள்ளார் சுப்மன் கில். மும்பை அணிக்கு 234 ரன்கள் இலக்கு.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை எடுத்தது.

- Advertisement -

நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தட்டுத்தடுமாறி வந்த சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து உள்ளே வந்த சாய் சுதர்சன் நங்கூரம் போல நிலைத்து நின்று ஒரு பக்கம் விளையாட, மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர்களை சிக்சர் மற்றும் பௌண்டர்களாக டீல் செய்தார்.

சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் 94 ரன்கள் மற்றும் 101 ரன்கள் அடித்திருந்தார். இப்படிப்பட்ட ஃபார்மில் இருந்த சுப்மன் கில் போட்டியின் இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க சற்று கடினமான கேட்ச்சை தவறவிட்டார் டிம் டேவிட்.

அதன் பிறகு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்திக் கொண்டிருந்தார் கில்.

- Advertisement -

49 பந்துகளில் சதமடித்த சுப்மன் கில், இந்த சீசனில் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். கடந்த இரண்டு முறையும் நூறு ரன்களை கடந்த பிறகு உடனடியாக ஆட்டமிழந்துவிட்டார். இம்முறை அந்த தவறை செய்யாமல் பொறுப்புடன் விளையாடி வேகமாக இன்னும் ஸ்கோர் உயர்திக் கொடுத்தார். 60 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 129 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சீசனின் அதிகபட்ச ஸ்கொரை பதிவு செய்து அவுட்டானார்.

நிலைத்து ஆடி வந்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் 43 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ரிட்டயர்டு ஹர்ட் கொடுத்து வெளியேறினார். கடைசியில் வந்து கேமியோ விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார்.

சுப்மன் கில் ஆடிய அபாரமான ஆட்டத்தினால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ்அணி.

இவ்வளவு பெரிய இலக்கை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சேஸ் செய்ததே இல்லை. இதை சேஸ் செய்து பைனலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி செல்லுமா? அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக பைனலுக்குள் நுழையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!