6 வருடங்கள்.. ருதுராஜை தாண்டி சாதனை படைத்த சுப்மன் கில்.. கேகேஆர் போட்டியில் சாதனை

0
36
Gill

நேற்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜை தாண்டி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறியதால் அந்த அணி நெருக்கடிகளை சந்தித்தது. நிலையில் இந்த வருடம் மீண்டும் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை நெக்ரா சிறந்த முறையில் உருவாக்கி இருக்கிறார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது மூலம் 12 புள்ளிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

கலக்கிய கேப்டன் கில்

நேற்று வழக்கம்போல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கில் இருவரும் நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான துவக்கத்தை கொடுத்தார்கள். சாய் சுதர்சன் 32 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் அரை சதத்தை தாண்டி வேகமாக சதத்தை நோக்கி முன்னேறினார். இறுதியாக அவர் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

கில் படைத்த புதிய சாதனை

இதைத்தொடர்ந்து விளையாடிய கேகேஆர் அணிக்கு கேப்டன் ரகானே அதிகபட்சமாக 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்களில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி அடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கேப்டன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களில் ருதுராஜை தாண்டி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க : தோற்றால் ஒன்றும் ஆகாது.. முதல்ல பயம் இல்லாம விளையாடுங்க.. பேட்ஸ்மேன்களுக்கு கேகேஆர் கேப்டன் அறிவுரை

ஐபிஎல் தொடரில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக ஆட்டநாயகன் விருதுகள்:

13- கேஎல்.ராகுல்
11- ஷுப்மன் கில்*
11 – ருதுராஜ் கெய்க்வாட்
10- பட்லர் என்றால்
8-ஜஸ்பிரித் பும்ரா
8- ஷிகர் தவான
8 – விராட் கோலி
8 – ரவீந்திர ஜடேஜா
8 – ஆண்ட்ரே ரஸ்ஸல்

- Advertisement -