இந்தியா பாக் போட்டி குறித்து தப்பான கருத்தை யார் சொன்னது.? கொஞ்சம் ரசிகர்களை கவனிங்க – சுப்மான் கில் கருத்து

0
262

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிகெட் லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது இரண்டு நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான்கில் இந்தப் போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் போட்டி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய நிலையில் அங்கு ஏற்பட்ட சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக அதற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்தது. அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வந்தது.

ஐசிசி தொடர்களில் விளையாடும் நிலையில் அதில் இந்திய அணியின் ஆதிக்கமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக மேலோங்கி இருந்தது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியை வீழ்த்தியது. எனவே இந்த இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது எனவும், இந்த இரண்டு அணிகளுக்கு இடையே போட்டி மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என கருத்துக்கள் வெளிவரும் நிலையில், அது குறித்து கில் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதை யார் சொல்ல முடியும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒரு மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் அல்லது குறைவாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்பதை நான் நம்பவில்லை. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அது ஒரு நீண்ட வரலாற்றை குறிக்கிறது. இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போது அது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கிறது.

இதையும் படிங்க:நல்ல வேளை.. இந்தப் பையன் காலத்துல நான் பந்து வீசல.. அக்தரையே மிரள வைத்த இந்திய வீரர்.. முழு விபரம்

எல்லாருமே இந்த போட்டியை பார்த்து மகிழ்கிறார்கள். அத்தனை பேரும் இந்த போட்டியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் அது குறைவான விளம்பரம் அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் என்று நாம் யார் சொல்ல முடியும்? நாங்கள் அங்கு கிரிக்கெட் விளையாடச் சொல்கிறோம். நான் அணிக்காக விளையாடுவதும், நாட்டை பிரதிநிதிப்படுத்துவ முயற்சிப்பதும், அணி வெற்றி பெறுவதற்காக உழைப்பதும் எங்கள் முயற்சியாகும்” என்று கில் கூறியிருக்கிறார். எனவே நாளை நடைபெற உள்ள போட்டி இரண்டு நாட்டு ரசிகர்களுக்குமே மிகப் பெரிய ஆர்வம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

- Advertisement -