இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளரான சோயப் அக்தர் இந்திய இளம் வீரர் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
பாகிஸ்தானில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தத் தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாளை இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா துபாயில் இருக்கும் நிலையில் அவரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் சந்தித்து கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா சாம்பியன் டிராபி இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சோயப் அக்தர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவரது காலத்தில் நான் இல்லை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்த இளம் பையனை போன்ற வீரர்கள் இந்த காலகட்டத்தில் அதிரடியாக விளையாடி வரும் நிலையில் இவர்கள் காலத்தில் நான் பந்து வீசவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடைசியாக அபிஷேக் ஷர்மா சிறப்பான சதம் ஒன்றை அடித்திருக்கிறார். அவரது ஆட்டத்தை பார்த்து நான் பாராட்டி இருக்கிறேன். அது அருமையாகவும், அதே வேலையில் ஆச்சரியமாகவும் இருந்தது. நான் அவருக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டுமே கூறினேன்.
இதையும் படிங்க:எங்க இந்திய அணியை விட பாகிஸ்தான்தான் ஜெயிக்கணும்.. அதுதான் நியாயம் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு
அதாவது உன் பலத்தை மட்டும் விட்டுவிடாமல் கடைசி வரை உன் அதிரடி ஆட்டத்தை விளையாடு என்று கூறி இருக்கிறேன். துபாயில் ஒரு விதிவிலக்கான திறமைசாலியான அபிஷேக்சர் மாவை சந்தித்தேன். அவர் வரும் ஆண்டுகளில் நிறைய அற்புதங்கள் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசி இருக்கிறார். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.