இந்த முறை ஐபிஎல் தொடரில் அணிகள் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு இன்னிங்ஸில் 283 ரன்கள் குறித்தது. இதற்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 262 ரன்கள் சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் தொடரில் பேட்டிங் அணுகுமுறை மிகவும் அதிரடியாக மாறியிருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதி இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
300 ரன்கள் வரப்போவது உறுதி
இது குறித்து சுப்மன் கில் கூறும்பொழுது “தற்போது விளையாட்டின் வேகம் ஒரு போட்டியில் ஒரு அணி 300 ரன்கள் எடுக்கலாம் என்கின்ற நிலையை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிலையை ஏற்றுவதற்கு நாங்கள் மிக நெருக்கமாக சில நேரங்களில் வந்திருக்கிறோம். ஐபிஎல் தொடரின் சிறந்த அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு நட்சத்திரம் வெளியில் வருகிறது”
“இந்த தொடரில் குறைபாடு மதிப்பிடப்பட்ட வீரர்கள் மற்றும் அணிகள் கூட மிகப் பெரிய நிகழ்வுகளை செய்கின்றன. போட்டிகளின் அமைப்பு மற்றும் அடிக்கடி போட்டிகளில் விளையாடுகின்ற காரணத்தினால் வீரர்களை விளையாட்டுடன் தொடர்ந்து ஈடுபாட்டுடன் வைக்க முடிகிறது. நீங்கள் ஒரு வெற்றி பெற்றால் நீங்கள் மூன்று அல்லது நான்கு வெற்றிகள் பெறுவதற்கு அது உங்களுக்கு வேகத்தை கொடுக்கிறது”
இந்த இரண்டு விஷயங்கள் முக்கியம்
“தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்துவீச்சு இருக்கிறது. அதே சமயத்தில் எங்களிடம் சுழல் பந்துவீச்சில் ரஷீத் கான் இருக்கிறார். மேலும் எங்களிடம் அதிரடியாக விளையாடக்கூடிய பட்லர், பிலிப்ஸ் மற்றும் ரூதர்போர்ட் ஆகியோர் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பும்ரா இல்லாதது பெரும் சவாலை ஏற்படுத்திவிட்டது.. மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கருத்து
“நீங்கள் சரியான முறையில் விளையாடிய புத்திசாலித்தனமான முடிவுகள் எடுத்தும் இரண்டு மூன்று போட்டிகளில் தோற்றால் அது பிரச்சனையான விஷயம் கிடையாது. நம்முடைய அணி தேர்வு மற்றும் யுக்தியில் நிலைத்தன்மை இருக்க வேண்டும். மேலும் ப்ரோபோபிலிட்டி மற்றும் லாஜிக் இவைகளை வைத்து எந்த அளவுக்கு நீங்கள் அதிகமாக விளையாடுகிறீர்களோ அந்த அளவுக்கு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியிருக்கிறார்.






