ஜெய்ஸ்வால் ஆடனும்.. ஆதரவு கொடுத்து இருக்கும் கில்.. நெகிழ்வான சம்பவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
186
Gill

இந்திய ஒரு நாள் அணியில் பேட்டிங் வரிசையில் தான் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி விளையாடியது குறித்து சுப்மன் கில் மிக முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்கினார். இந்த நிலையில் வழக்கமான இந்திய ஒருநாள் அணியின் துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கியது உடன் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

அணி நிர்வாகத்துக்கு உதவும் கில்

இந்திய உள்நாட்டு ரஞ்சி போட்டியில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகச் சிறப்பாக சதங்களாக ஜெய்ஸ்வால் குவித்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் புதிய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அவர் தேவைப்பட்டார். அப்பொழுது துவக்க ஆட்டக்காரராக கில் மற்றும் ரோஹித் சர்மா விளையாடினார்கள்.

இந்த நிலையில் கில் தனக்கு மூன்றாவது இடத்தில் விளையாடி பழக்கம் இருப்பதாகவும், எனவே தான் மூன்றாவது இடத்தில் விளையாடிக் கொள்வதாகவும் கூறி ஜெய்ஸ்வால் விளையாடுவதற்கு மிகச் சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுத்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஜெய்ஸ்வால் களம் இறங்குவதற்கு தன்னை மூன்றாவது இடத்தில் கீழே இறக்கி கொண்டிருக்கிறார். மேலும் இது குறித்து அவர் மிக முக்கியமான விஷயம் ஒன்றை பேசவும் செய்திருக்கிறார்.

- Advertisement -

எனக்கு எந்த சிரமமும் இல்லை

இது குறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “எங்கள் அணியில் எல்லோரையும் உற்சாகப்படுத்துவதில் முதன்மை இடத்தில் இருப்பவர் விராட் கோலிதான். மேலும் அவர் நேற்று பயிற்சிக்கு வந்தார் நல்ல முறையில் விளையாடினார் எனவே அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார். நான் என்னுடைய சதத்தை பூர்த்தி செய்வதற்காக அப்படியான ஒரு ஷாட்டை அடித்து ஆட்டம் இழக்கவில்லை. நான் 60 ரன்னில் இருந்திருந்தாலும் அந்த குறிப்பிட்ட ஷாட்டை ஆடியிருப்பேன்”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தான் செய்யும் அதிரடி முக்கியமா மாற்றம்.. கேப்டன் ரிஸ்வான் சூசக தகவல்

“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக மூன்றாவது இடத்தில் தான் விளையாடிக் கொண்டு வருகிறேன். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் களம் இறங்குவதற்கு நான் பெரிதாக எதையும் சரி செய்து கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்த இடத்தில் நீங்கள் களம் இறங்கி விளையாடும் பொழுது விக்கெட்டுகள் வேகமாக சரிந்தால் அதற்கு ஏற்ற வகையில் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கு நீங்கள் விவேகமான முறையில் பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோல் அணி நல்ல முறையில் தொடங்கினால், நீங்கள் அதை நல்ல வேகத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கு இந்த இடத்தில் விளையாட பிரச்சனை இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -