சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தான் செய்யும் அதிரடி முக்கியமா மாற்றம்.. கேப்டன் ரிஸ்வான் சூசக தகவல்

0
320
Rizwan

இந்த முறை ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு முக்கிய மாற்றத்தை தங்களது பேட்டிங் வரிசையில் செய்யவிருப்பதாக தெரிய வருகிறது.

பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பெரிய ஏற்ற இறக்கங்களை கொண்டதாகவே சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு வெற்றியைப் பெற்றால் அதற்கு அடுத்து எதிர்பாராத ஒரு தோல்வியை அடைந்து மிகப்பெரிய விமர்சனங்களை உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டு பக்கங்களிலும் பாகிஸ்தான் அணி சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஏற்பட்டிருக்கும் புதிய அழுத்தம்

உள்நாட்டில் பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வி அடைந்து பெரிய விமர்சனங்களை சந்தித்து தங்களது நட்சத்திர வீரர் பாபர் அசாம் வரையில் அணியிலிருந்து நீக்கம் செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் அணி நிர்வாகம் சென்றது. இதன் காரணமாக அந்த அணியைச் சுற்றி நிறைய நெகட்டிவ் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் சொந்த மண்ணில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகின்ற காரணத்தினால் குறைந்தபட்சம் அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம் பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான் அணி இடம் பெற்று இருக்கிறது. இந்தியா நியூசிலாந்து இரண்டு அணிகளையும் தோற்கடிக்க வேண்டும் இல்லை இரண்டு அணிகளில் ஒரு அணியையாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

சையும் அயூப் கொண்டு வந்த சிக்கல்

இந்த சூழ்நிலையில் இளம் தொடக்க இடது கை ஆட்டக்காரர் சையும் அயூப் தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் அடைந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பகார் ஜமான் உடன் யார் துவக்க வீரராக வருவார்கள் என்பது கேள்வியாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : என் கையில் எழுதி.. ஞாபகம் வச்சுதான்.. கேப்டனா பிளேயர்ஸ்க்கு இதை செஞ்சிட்டு வரேன் – எம்ஐ கேப்டன் பேட்டி

தற்போது இதற்கு சூசகமாக பதில் அளித்து இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிவித்திருக்கிறார். பொதுவாக டி20யில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்திலும் பாபர் அசாம் விளையாடி வந்தார். இந்த நிலையில் மிடில் ஆர்டரில் விளையாட சில நல்ல வீரர்கள் கிடைத்திருக்கின்ற காரணத்தினால், பாபர் அசாமை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தும் அதிரடியான முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எடுத்து இருப்பதாக தெரிகிறது!

- Advertisement -