கில் டி20 தொடரில் விளையாட தயாராகி விட்டாரா.. இந்திய அணியின் துவக்க வீரர் யார்? – அவரே வெளியிட்ட தகவல்

0
55
Gill

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் விளையாடுவாரா? என்பது குறித்து அவரே பேசியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் சுப்மன் வில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவர் அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் விளையாடவில்லை.

- Advertisement -

டி20 தொடரில் விளையாடுவாரா?

தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெற்று இருக்கிறார். மேலும் அவரது காயத்தின் தன்மை பொறுத்து அவர் விளையாடுவாரா இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்க்கும் முன்பாக இந்தியாவில் பலமான தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும், இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே சுப்மன் கில் விளையாடுவது அவசியமாக அமைகிறது.

- Advertisement -

கில் தந்த விளக்கம்

இதுகுறித்து சுப்மன் கில் பேசும் பொழுது “நான் இப்பொழுது மிகவும் நன்றாக உணர்கிறேன். நான் என்சிஏ-வுக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு நிறைய திறன் பயிற்சி அமர்வுகள், மற்றும் சில பயிற்சி அமர்வுகள் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்”

இதையும் படிங்க : நம்பர் 3வது இடத்திலிருந்து 6வது இடம் வரை.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன் சூர்யகுமார் வார்னிங்

“ஒரு வீரர் காயம் அடைந்த பிறகு அதில் இருந்து மீண்டு வரவும் பயிற்சி பெறவும் இந்த இடம் சொர்க்கம் போன்றதாகும். இதற்கு மேல் நாம் எதுவுமே இங்கு கேட்க முடியாது. நீங்கள் உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் இங்கு சிறப்பாக தயாராகிக் கொள்ள முடியும். இப்படி சிறப்பான வசதிகளை கொண்ட இந்த இடத்தை வீரர்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -