இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். நேற்றைய போட்டியில் அவர் எவ்வாறு தன் பேட்டிங் திட்டத்தை அமைத்திருந்தார் என்று பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் 96 பந்துகளில் 14 பவுண்டரிகள் உடன் 87 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு மிக அருகில் ஆட்டம் இழந்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறந்த பாட்னர்ஷிப் கொண்டு வந்து, அடுத்து அக்சர் பட்டேல் உடனும் நல்ல பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி மிக எளிதானதாக மாறியது.
துணை கேப்டன் கில்
தற்போது இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாளை ரோகித் சர்மா ஏதாவது ஒரு போட்டியில் விளையாடவில்லை என்றால் அணியை வழிநடத்த வேண்டிய இடத்தில் அவரே இருக்கிறார். இந்தப் பொறுப்பை அவர் செய்வதற்கு ரோகித் சர்மா எப்படியான சுதந்திரம் கொடுத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கில் பேசும் பொழுது “நான் பேட்டிங்கில் அதிகம் மாற்றம் எதுவும் செய்து கொள்ளவில்லை. களத்தைப் பொறுத்தவரையில் எந்த உள்ளீடுகளை வேண்டுமானாலும் தன்னிடம் தயங்காமல் வந்து கூறும்படி ரோகித் சர்மா என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால் ரோகித் பாய் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற உள்ளீடுகளை கொடுக்கவே நான் நினைக்கிறேன்”
பேட்டிங் திட்டம் இதுதான்
“19 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது பாசிட்டிவாக இருக்க நினைத்தேன். அதிகம் பின் காலில் விளையாடாமல் முன் காலில் விளையாடி ரன்கள் எடுக்க விரும்பினேன். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மாதிரி வந்து ஒருவர் விளையாடும் பொழுது தானாகவே எதிரணி பேக் புட்டுக்கு சென்று விடுகிறது. அவர் சிறப்பாக விளையாடியது எனக்கு மிகவும் வசதியாக அமைந்தது”
இதையும் படிங்க : ஆர்ச்சர் அவரோட பலவீனத்தை டார்கெட் செஞ்சார்.. ஆனா ஐயர் அடித்த சிக்ஸ் என்னால நம்பவே முடியல – கெவின் பீட்டர்சன் பேட்டி
“நான் பேட்டிங் செய்து கொண்டு இருந்த பொழுது விக்கெட் கொஞ்சம் இரட்டை வேகம் கொண்டதாக இருப்பதாக நினைத்தேன். மேலும் நான் 70 இரண்டில் இருந்த பொழுது அடுத்த புல் ஷாட் சிறப்பாக இருந்தது. இதைத்தொடர்ந்து ஸ்பின்னர்களுக்கு நல்ல முறையில் சாதகம் காணப்பட்டது. எனவே ஸ்கொயரை பார்த்து பந்தை தரையில் அடிக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். இதுதான் நேற்று என்னுடைய பேட்டிங் திட்டமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.






