இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்த விதம் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சில பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
ஐயரின் அற்புதமான பேட்டிங்
முதலாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் முதலாவது ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு பெற்று விளையாடினார். இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணியில் தொடக்க விக்கெட்டுகள் தடுமாறினாலும் அணியின் துணை கேப்டன் சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.
ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் தடுமாறி வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் தனது துல்லியமான வேகத்தில் ஷார்ட் பிட்ச்
பந்து ஒன்றை வீச, அதை சரியாக கனித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைக்கு மேல் வந்த பந்தை ஆப்சைடு திசையில் அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்தார். அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகான ஷாட் ஆக இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அந்த சிக்ஸ் அபாரமாக இருந்தது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையிலேயே அழகாக பேட்டிங் செய்தார். ஜோப்ரா ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்தை இன்று மிக வேகமாக வீசினார். ஐயருக்கு பேட்டிங் மிக எளிதாக இருந்தது போல தெரிந்தது. அந்த குறிப்பிட்ட பந்து எவ்வளவு வேகமாக வந்ததோ அவ்வளவு வேகமாக சிக்ஸருக்கு சென்றது. அவரது பேட்டிங்கில் மிக அருமையான விஷயம் என்னவென்றால் இடைவெளிகளை கண்டுபிடித்து அடித்தார்.
இதையும் படிங்க:நான் தப்பு செய்யாம பார்த்து கொண்டது இவர்தான்.. கிரிக்கெட்டில் நான் மீண்டும் வாழ விரும்பும் தருணம் – சச்சின் உணர்ச்சி பேட்டி
ஸ்ரேயாஸ் ஐயர் மனதில் ஒரு திட்டம் இருப்பது போல தெரிந்தது. பதிவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசிய நிலையில் அவர்களது வேகத்தை இவர் பயன்படுத்திக் கொண்டார். நேற்றைய போட்டியில் பின்னோக்கி விளையாட தயாராக இருந்தார். தனது எடையை முன் பாதத்தில் வைத்ததால் அந்த விக்கெட்டில் அவரால் சிறப்பாக விளையாட முடிந்தது. மிக வேகமான பந்துவீச்சை எதிர்த்து விளையாடும் அளவிற்கு மனதில் தெளிவை வைத்திருந்தார். ஷார்ட் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் லைனை நோக்கி விளையாடினார். முன்பு அவர் ஓபன் செய்து பாய்ண்ட் திசையை டார்கெட் செய்வார். இப்போது அதில் சிறிய மாற்றத்தை செய்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






