ஸ்டீவ் ஸ்மித்க்கு போன் பண்ணினேன்.. இங்கிலாந்துல ஆட இந்த ஐடியா கொடுத்தார் – சுப்மன் கில் பேட்டி

0
140
Smith

இங்கிலாந்தில் எப்படி விளையாட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தனக்கு அறிவுரை கூறினார்கள் என சுப்மன் கில் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் கேப்டனாக முதல் போட்டியிலேயே சதமும் அடித்தார். இத்துடன் இந்திய அணி தொடரை சமம் செய்வதற்கு 754 ரன்கள் எடுத்து முக்கிய காரணமாக இருந்தார். இத்துடன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி

அதற்கு முன்பாக சுப்மன் கில் டெஸ்ட் சராசரி மிகவும் குறைவாக இருந்தது. மேலும் அவர் ஆசியா தாண்டி எந்த ஒரு நாட்டிலும் சதம் அடிக்காமல் இருந்தார். எனவே கேஎல்.ராகுல் அல்லது ரிஷப் பண்ட் யாருக்காவது கேப்டன் பொறுப்பு கொடுத்து இருக்க வேண்டும் என வெளியில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இப்படியான அழுத்தம் மிகுந்த நிலையில் கேப்டனாக முதல் தொடரின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். மேலும் இங்கிலாந்தில் வைத்து தொடரை இழக்காமலும் தனது முதல் தொடரில் திரும்பி வந்தார். தற்போது இந்த தொடரில் தனது பேட்டிங் செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேத்யூ வேட் மூலமாக போன் செய்தேன்

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய மேத்யூ வேட்யிடம் இருந்து யிடம் இருந்து ஸ்மித் போன் நம்பரை வாங்கி இங்கிலாந்தில் எப்படி விளையாட வேண்டும்? என கேட்டு தெரிந்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்.. சாய் சுதர்சன் ஏமாற்றம்.. ராகுல் அரைசதம்.. வலுவான நிலையில் இந்தியா

இதுகுறித்து சுப்மன் கில் பேசும் பொழுது “இந்தியாவுக்கு வெளியே சிறப்பாக செயல்படாத அழுத்தம் எனக்கு இருந்தது. ஆனால் என்னுடைய பயிற்சி மற்றும் மனரீதியாக நான் எந்த நிலைக்குள் இருக்கிறேன் என்பது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் இங்கிலாந்தில் விளையாடுவது குறித்து சச்சின் சாரிடம் பேசினேன். அடுத்து மேத்யூ வேட் மூலமாக ஸ்மித் நம்பர் வாங்கி அவரிடமும் பேசினேன். இருவரும் எனக்கு ஒரே விஷயத்தைதான் சொன்னார்கள். அது ‘ நேரான பந்துகளுக்கு பாதுகாப்பாக இரு; ஸ்கொயரில் ரன்கள் எடு’ என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -