இந்திய கிரிக்கெட்

சச்சின் விராட்டின் அரிய 2 சாதனைகள்.. கில் பேட்டிங்கில் தூள் தூளானது.. புதிய வரலாறு இங்கிலாந்தில் பிறந்தது

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 250 ரன்கள் தாண்டி எடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டாவது நாள் தேநீர் இடைவேளையின் போது ஏழு விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து இருக்கிறது.

ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் ஒரு தலைப்பு

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பொறுப்புடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து 137 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கில் ரவீந்திர ஜடேஜா ஜோடி 23 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை கரை சேர்ப்பது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் கேப்டன் கில் உடன் இணைந்து 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார். இந்த இரண்டு விக்கெட்டுக்கும் சேர்த்து இந்திய அணிக்கு 347 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில் மெகா சாதனை

தற்போது இந்திய அணியின் கேப்டன் பில் 250 ரன்கள் தாண்டி 265 ரன்கள் எடுத்து தேநீர் இடைவேளையின் போது களத்தில் நிற்கிறார். இதன் மூலமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி படைத்திருந்த இரண்டு பிரம்மாண்டமான சாதனைகளை முறியடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : கில் இரட்டை சதம்.. SENA நாடுகளில் ஆசிய கேப்டனின் கெத்து சாதனை.. 311 பந்துகளுக்கு அசராத ஆட்டம்.. இங்கிலாந்து தடுமாற்றம்

இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி 254 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தார். அடுத்து சேனா நாடுகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக 241 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இந்த இரண்டு சாதனைகளையும் இந்திய கேப்டனாகவும் பேட்மேனாகவும் கில் முறியடித்திருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shubman Gill

Recent Posts