கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

WTC சைக்கிள்.. விராட் ரோஹித்தை தாண்டி கில் படைத்த பிரம்மாண்ட சாதனை.. கேப்டனாக புதிய மைல்கல்

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளில் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்களில் இந்திய அணிக்காக சுப்மன் கில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணிக்கு சதம் அடித்து ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் கில் இருவரும் காலத்தில் இருந்தார்கள். இன்று இருவரும் இரண்டாவது நாள் விளையாட களம் இறங்கினார்கள்.

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

இந்த நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 258 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஜுரல் இடத்தில் பேட்டிங் பயிற்சிக்காக நிதீஷ் குமார் ரெட்டி அனுப்பப்பட்டார்.

கேப்டன் சுப்மன் கில் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் சேர்ந்து சிறப்பான முறையில் விளையாட ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி அரை சதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் கேப்டன் கில் கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் அரை சதம் எடுத்தார். இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 400 ரன்கள் நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

கேப்டன் கில் சாதனை

இன்று கேப்டன் கில் அரைசதம் அடித்ததில் மூலமாக ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் களில் இந்திய அணிக்கு அதிக ரன் அடித்தவராக ரிஷப் பண்ட்டை தாண்டி முதல் இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பின் தங்கி இருக்கிறார்கள். மேலும் கில் கேப்டனாக ஆயிரம் ரன்களை தொட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : உலக கோப்பைக்கு இல்லை.. இந்த விஷயத்துக்காகவே ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடனும் – முகமது கைப் பேட்டி

WTC-யில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்

2732 – ஷுப்மான் கில் (71)
2731 – ரிஷப் பந்த் (67)
2716 – ரோஹித் சர்மா (69)
2617 – விராட் கோலி (79)
2505 – ரவீந்திர ஜடேஜா (69)
2420 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (48)

- Advertisement -
Published by
Tags: Shubman Gill

Recent Posts