இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சதம் அடித்து பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்தியா கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 407 ரன்கள் எடுக்க இந்திய அணிக்கு 180 ரன்கள் முன்னிலை கிடைத்தது.
சுப்மன் கில் மீண்டும் அசத்தல்
இதைத் தொடர்ந்து இன்று நான்காவது நாளில் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் 55, ரிஷப் பண்ட் 65 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து ஒரு முனையில் நின்று விளையாடிய கேப்டன் கில் மீண்டும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதிக்க ஆரம்பித்தார்.
மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 130 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து அசத்தினார். தற்போது கேப்டன் கில் 100, ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து 484 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
கில் மெகா சாதனைகள்
ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக சுனில் கவாஸ்கர் 1971 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 124, 220 தங்கள் என மொத்தம் 334 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 269 மற்றும் 100 ரன்கள் என மொத்தமாக எடுத்து சுனில் கவாஸ்கரின் சாதனையை 54 ஆண்டுகள் கழித்து முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : SENA நாடுகளில் பாகிஸ்தான் இலங்கை செய்யாததை.. தனியாக சாதித்த ரிஷப் பண்ட்.. 2 மெகா சாதனைகள்
மேலும் இதன் மூலமாக ஒரு இந்திய கேப்டன் ஒரு டெஸ்ட் போட்டியில் அடித்த அதிக ரன்கள் ஆகவும் இது பதிவாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் நீண்ட வருடங்களாக இருந்து வந்த யாரும் செய்யாத மெகா சாதனைகளை இந்தத் தொடர் சதங்களின் மூலமாக இந்திய கேப்டன் கில் படைத்திருக்கிறார்.






