இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் ஆசிய பேட்ஸ்மேனாக மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்கு தோல்விக்கான வாய்ப்புகள் அதிகபட்சமாக உருவானது.
மோசமான முதல் ஓவர்
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாட களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேஎல்.ராகுல் மற்றும் கேப்டன் கில் இருவரும் மிகப் பொறுமையாக விளையாடி இரண்டாவது செஷன் கிரிக்கெட் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்தார்.
இங்கிலாந்து மண்ணில் சாதனை
தற்போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணி 94 ரன்னுக்கு இரண்டு விக்கெட் இழந்து, இந்த போட்டியை டிரா செய்யக்கூடிய வாய்ப்பை ஓரளவுக்கு பெற்று இருக்கிறது. இன்று முழுவதும் விக்கெட் விழாமல் இருந்து, நாளை 75 ஓவர்கள் விளையாடினால், போட்டியை டிரா செய்ய முடியும்.
மேலும் இந்த போட்டியில் இந்திய கேப்டன் வில் அரை சதம் அடித்ததின் மூலமாக இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்த ஆசிய பேட்ஸ்மேனாக சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் 19 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் முகமது யூசுப் படைத்த சாதனையை முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : அவ்வளவு தான் போச்சு.. முதல் ஒவரிலே 2 விக்கெட் இழந்த இந்தியா.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இங்கிலாந்து
632 – ஷுப்மான் கில் (2025)
631 – முகமது யூசுப் (2006)
602 – ராகுல் டிராவிட் (2002)
593 – விராட் கோலி (2018)
542 – சுனில் கவாஸ்கர் (1979)






