படிதாரை வச்சிக்கிட்டு இதை கேக்குறீங்களே.. தனியா வாங்க இதுக்கு பதில் சொல்றேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
849
Shreyas

இன்று ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நகைச்சுவையாக பதில் அளித்திருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதிக்கொள்ள இருக்கின்றன. இதற்கு முன்பாக இரண்டு அணி கேப்டன் கலந்து கொள்ளும் வழக்கமான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

- Advertisement -

எங்க வீரர்களுக்கு பயமில்லை

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் “இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு மிகவும் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் காத்திருக்கிறேன். ஆர்சிபி சவால் அளிக்கக்கூடிய அணிதான். ஒரு அணியின் கேப்டனாக வீரர்களிடமிருந்து திறமையை வெளிக்கொணர்வதுதான் வேலை என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் பயமே இல்லாமல் விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள்”

“அவர்கள் முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடும் அளவுக்கு அச்சம் இல்லாதவர்கள். ரிக்கி பாண்டிங் ஒரு அற்புதமான பயிற்சியாளர், அவர் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார். நம்முடைய முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அவர் கொடுப்பார். வெற்றி தோல்வியை பொறுத்து அவரது அணுகுமுறை மாறாது. போட்டிக்கு முன்பாக அவர் பேசக்கூடிய உரை அனைவருக்கும் அவ்வளவு ஊக்கத்தை அளிக்க கூடியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ராவின் யார்க்கர் முறியடிப்பு

இதற்கு முன்பாக மும்பை அணிக்கு எதிராக பும்ராவின் மிகச்சிறந்த யார்க்கர் பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிக்கு விளையாடியது இப்பொழுது வரை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பந்தை தடுப்பதே கடினம் எனும் நிலையில் அவர் சிறப்பாக விளையாடி பவுண்டரி ஆச்சரியத்திற்கு காரணமாக இருக்கிறது. அந்தப் பந்தை எப்படி சந்தித்து விளையாடினிர்கள்? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டார்கள்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டி20.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி அணி அறிவிப்பு.. 3 பெரிய தலைகள் வருகை.. 2026 WCக்கு குறி

இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “நீங்கள் எதிரணியின் கேப்டன் படிதாரை வைத்துக்கொண்டு இதை கேட்டால் எப்படி சொல்ல முடியும்? எனவே நீங்கள் தனியாக வந்து கேளுங்கள் நான் இதற்கு பதில் சொல்கிறேன் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -