2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிற்பகுதி மார்ச் மாதத்தில் தான் நடைபெற்றது. இந்த தொடரில் நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த விருதுக்கு நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, ஜேக்கப் துப்பி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் போட்டி போட்டனர். எனினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஸ்ரேயாஸ், சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
மார்ச் மாதத்தில் ஸ்ரேயாஸ் செயல்பாடு:
இதன் மூலம் இந்திய வீரர்கள் தொடர்ந்து இரண்டு விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் கில் வாங்கிய நிலையில் தற்போது மார்ச் மாதம் ஸ்ரேயாஸ் வாங்கியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், “மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டது நினைத்து மிகவும் பெருமை கொள்கின்றேன்.”
“இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனதாக இருக்கின்றது. அதுவும் நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற மாதத்தில் இந்த விருது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வை என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றுவேன். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவாகும்.”
3 போட்டிகளில் 172 ரன்கள்:
“எனக்கு தற்போது அது நிஜமாகி இருக்கிறது. இந்த சூழலில் என்னுடைய அணி வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி குழுவில் உள்ள உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் ஆதரவால் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்னுடைய ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.”
இதையும் படிங்க: இந்தியா, வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு.. 3 ஒருநாள், 3 டி20 தொடரில் விளையாடுகிறது
“உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் தான் என்னை இவ்வாறு விளையாட வைக்கிறது” என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் 172 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய சராசரி 57 ஆகும். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 250 என்ற சவாலான இலக்கை எட்டியது. இதைப்போன்ற அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் நியூசிலாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 48 ரன்கள் ஸ்ரேயாஸ் எடுத்தார்.






