ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டிருக்கிறது. பெரும்பான்மையான அணிகள் தற்போது ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இரண்டு அணிகள் மட்டும் 7 போட்டிகளில் விளையாடிவிட்டது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரின் முதல் பகுதி முடிவுக்கு வந்து, இரண்டாவது பகுதி தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடர் முடிவு அடைந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான தொடர்:
இந்த தொடர் ஜூன் இருபதாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்திய டெஸ்ட் அணிக்கு கருதப்படுகிறது. இந்த சூழலில் இந்த தொடர் முடிவடைந்த உடன் அடுத்தது இந்தியா எங்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி மிர்ப்பூர் நகரிலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்ப்பூர் நகரிலும் நடைபெற இருக்கிறது.
முதல் முறையாக டி20 தொடர்:
மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து டி20 தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டி20 போட்டி சட்டோகிராமிலும், இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி மிர்ப்பூரிலும், மூன்றாவது t20 ஆகஸ்ட் 31-ம் தேதி மிர்ப்பூரிலும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: தோனி டெக்னிக்கை சொல்லித் தர மாட்டார்.. அவர் கற்றுத்தர விஷயமே வேற – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி
சர்வதேச டி20 வரலாற்றில் வங்கதேச அணி முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இருத்தரப்பு டி20 தொடரை நடத்துகிறது. அண்மையில் வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் டி20 தொடரை இழந்தது. கடைசியாக இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒரு நாள் தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த தொடரை வங்கதேச மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக வங்கதேச கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.






