டெல்லி அணியில் இருந்த நடையைக் கட்ட முடிவு செய்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் – கேப்டன் ஆகும் ஆசையில் இதை செய்கிறாரா ?

0
171
Shreyas Iyer DC

பிசிசிஐ தரப்பில் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கான ஏலம் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல் நிறுவனமான அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் கைப்பற்றியது. இந்த இரண்டு புதிய அணிகளுடன் இனி வரும் ஐபிஎல் தொடர்களில் மொத்தமாக 10 அணிகள் களம் இறங்க போகின்றன.

இந்த அனைத்து அணிகளுக்கும் இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஏல பட்டியலிலுள்ள வீரர்களில் இரண்டு இந்திய வீரர்களையும் மற்றுமொரு வெளிநாட்டு வீரரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதேபோல பழைய அணிகள் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் உறுதியாகியுள்ளது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல் அணியில் ஸ்ரேயாஸ் ஐயரின் பயணம்

2019 மற்றும் 2020ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தலைமை தாங்கினார். 2019ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் 7 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக டெல்லி அணியில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியும் கண்டது. இருப்பினும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அந்த அணி சென்னை அணியிடம் தோல்வி பெற்றது.

அதன் பின்னர் அதற்கு அடுத்த ஆண்டான 2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனையையும் நிகழ்த்தியது. இறுதிப்போட்டியில் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த ஆண்டு டெல்லி அணியை ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக தலைமை தாங்குவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருடைய தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக் கொண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த ஆண்டு டெல்லி நிர்வாகம் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது. அவருடைய தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக விளையாடி இந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற்றது. இருப்பினும் அந்த அணியால் இறுதிப் போட்டி வரை முன்னேற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டெல்லி அணியில் இருந்து வெளியேற நினைக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்

அடுத்து வரும் ஐபிஎல் தொடருக்கு டெல்லி அணி நிர்வாகம் நிச்சயமாக பண்ட்டை தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே இனி வரும் ஐபிஎல் தொடரிலும் அவரையே கேப்டனாக டெல்லி அணி தீர்மானிக்கும் என்று ஏறக்குறைய நாம் உறுதியாக கூறி விடலாம். இந்தக் காரணத்தின் அடிப்படையில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அணியில் இனி நீடித்தால் ஒரு வீரராக மட்டுமே தொடர்ந்து விளையாட முடியுமே தவிர, கேப்டனாக நிச்சயமாக விளையாட முடியாது. எனவே புதிய அணியில் இடம் பெற்று அந்த அணியில் கேப்டனாக விளையாடுவதில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியாக இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. எனவே டெல்லி அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் கூடிய விரைவில் வெளியேறி விடுவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.