நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்திய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளை எதிர் கொண்டு 97 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்டத்தில் சசாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் அவரால் சதம் அடிக்க முடியாமல் போனது. இந்தப் போட்டியில் சசாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 41 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் குவித்து விட்டு வெளியேறினார். கில் 14 பந்துகளில் 33 ரன்கள், அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஜாஸ் பட்லர் 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் குஜராத் அணி 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து கேப்டன் ஐயர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார் .
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்த தொடரின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்தது சிறப்பானது. நான் முதல் பந்தில் பௌண்டரி அடித்தது என்னை வேகப்படுத்தியது. குறிப்பாக ரபாடா பந்தில் ஒரு ஃபிளிக் ஷாட் அடித்தது கூட. சசாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது அணிக்கு மிகவும் முக்கியமானது. நாங்கள் ஒரு அளவுகோலை அமைத்தோம். ஆடுகளத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் விஷயங்கள் மாறக்கூடும். அதிர்ஷ்டவசமாக வைசாக் விஜயகுமார் இன்று நன்றாக செயல்பட்டார். அவர் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம்.
இதையும் படிங்க:15 ஓவர் சும்மாவே இருந்தாரு.. திடீர்னு வேற லெவல் சம்பவம்.. இந்த வெற்றி அவருக்குதான் – சுப்மான் கில் பேட்டி
சரியான அணுகு முறையுடன் வரும் குணாதிசயங்கள் அவரிடம் உள்ளன. அவர் யார்க்கர் பந்துகளை தொடர்ந்து வீசினார். மேலும் அர்ஷ்தீப் சிங் வைடு யார்ர்க்கர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் சரியான நேரத்தில் வந்து அணிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை வழங்கினார். பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவது பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது என்று நினைக்கிறேன். அர்ஷ்தீப் சாய் சுதர்சனை வீழ்த்தினார். அவர்தான் தாமதமாக தொடங்குவதற்கு முன்பாக வைட் யார்க்கர் வீசும் திட்டத்தை தொடங்கும் திட்டத்தை கூறினார். அது நன்றாகவே கை கொடுத்தது போட்டி தொடங்குவதற்கு முன்பாக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டத்தில் அனைவரும் உறுதியாக இருந்தோம்” என்று ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.