இன்று நடைபெற்ற ஐந்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மான்கில் தோல்வியடைந்த விதம் குறித்து சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.
பஞ்சாப் அணி வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளை எதிர்கொண்டு 97 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக மிடில் வரிசை ஆட்டக்காரர் சசாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்று இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. தொடக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் குவித்தார். மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 56 ரன், மற்றும் ரூதர் போர்டு 46 ரன் குவித்தாலும் இறுதியில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தோல்வியடைந்த விதம் குறித்து கில்
இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் கில் கூறும் போது ” நாங்கள் பந்து வீசும் போதும் மற்றும் பேட்டிங் செய்த போதும் எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நாங்கள் பந்து வீசும் போது அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது. நாங்கள் மைதானத்திலும் எங்களை ஏமாற்றி விட்டோம். ஆட்டத்தின் மிடில் வரிசையில் மூன்று ஓவர்களில் நாங்கள் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தோம். மற்றும் முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை.
இதையும் படிங்க:243 ரன்.. இம்பாக்ட் பிளேயரை வைத்து ட்விஸ்ட்.. குஜராத் அணிக்கு செக் வைத்த பாண்டிங் ஸ்ரேயாஸ் கூட்டணி.. 11 ரன்னில் பஞ்சாப் வெற்றி
அதுதான் நாங்கள் எங்களது ஆட்டத்தை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பல நல்ல நேர்மறையான விஷயங்களும் இருக்கிறது. இந்த தொடருக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன். 15 ஓவர்கள் பெஞ்சில் இருக்கும் போது இம்பாக்ட் பிளேயராக வந்து யார்க்கர்களை வீசுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. யார்கர்கள் தொடர்ந்து வீசியதற்கு அவருக்கு நன்றி. இது ஒரு நல்ல பேட்டிங் விக்கட் ஆகும். நீங்கள் பேட்டிங் செய்து 240 முதல் 250 ரன்கள் வரை இருக்கலாம். ஆனால் எதிரியை கட்டுப்படுத்துவது முக்கியம்” என்று பேசி இருக்கிறார்.