சூரியவன்சிய வேற மாதிரி பையன்.. அவன் பந்து வரதுக்கு முன்ன செய்ற ரெண்டு விஷயம் ஆச்சரியமானது – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
13
Shreyas

தற்போது உலக கிரிக்கெட்டில் பெரிய ஆச்சரியத்தை உருவாக்கி வருகின்ற வைபவ் சூர்யவன்சி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் தொடர்ந்து வைபவ் சூரியவன்சி மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் 15 வயதில் மோதி வருகிறார். அவரது அபார பேட்டிங் திறமை இந்த இளம் வயதில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

எதிர்கால கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

தற்போது ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் வரை மோசமாக விளையாடி வருகிறார்.

இதன் காரணமாக அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டுவரப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வைபவ் சூரியவன்சி இந்திய டி20 அணிக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அணியில் விளையாடும் வாய்ப்புள்ள இளம் வீரர் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

என்னிடம் வார்த்தைகள் இல்லை

பொதுவாக ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான இளம் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்களை மேலே கொண்டு வருவதில் சிறந்த கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி குறித்தும் மிகவும் மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த சதம் சும்மா வரல.. இதுக்கு பின்னாடி இவ்வளவு திட்டம் இருந்தது.. ஸ்டைலான அந்த விஷயத்தை கொண்டு வருவேன் – திலக் வர்மா பேட்டி

இதுகுறித்து அவர் பேசும் போது “வைபவ் சூரியவன்சி ஒரு அற்புதமான திறமையாளர். அவரைப் புகழ்வதற்கு வார்த்தைகள் போதாது. அவர் பேட்டிங் செய்யும் விதம், பந்து வீசுவதற்கு முன்பாக அவர் உருவாக்கும் அந்த ரிதம் மற்றும் எனர்ஜி ஆகியவற்றைப் பார்க்கும்போது, அவர் எதிர்காலத்திற்கான வீரர் என்று நினைக்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -