இந்த சதம் சும்மா வரல.. இதுக்கு பின்னாடி இவ்வளவு திட்டம் இருந்தது.. ஸ்டைலான அந்த விஷயத்தை கொண்டு வருவேன் – திலக் வர்மா பேட்டி

0
7
Tilak

நேற்று குஜராத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 45 பந்துகளின் சதம் அடித்து திலக் வர்மா வெல்ல வைத்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் அவர் முதல் 22 பந்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதற்குப் அடுத்த 23 பந்தில் ஆட்டம் இழக்காமல் 83 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 45 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியான ஆட்டமே மும்பை வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

- Advertisement -

நான் இப்படி திட்டமிடவில்லை

இந்த போட்டி குறித்து திலக் வர்மா பேசும் போது “இந்த அனுபவம் எவ்வளவு முக்கியமானது என்றால் முதல் சதம் எப்பொழுதும் மிகவும் முக்கியமானது. அதே சமயத்தில் இது எங்களுடைய அணிக்கும் மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது. உண்மையைச் சொன்னால் இங்கிருந்து எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. கடந்த ஐந்து போட்டிகளாக மைதானத்தில் நான் அதிக நேரம் செலவு செய்யவில்லை. இன்று அதை என்னால் செய்ய முடிந்தது”

“நான் பந்தை தரையில் அடித்து ஆட வேண்டும் என நினைக்கவில்லை. அப்போது அணியின் சூழ்நிலை என்னவோ அதற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். என்னை அமைதியாக வைத்துக் கொண்டு அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினேன். என்னிடம் பல வகையான ஸ்டைலான ஷாட்டுகள் இருக்கின்றன. அதை தேவைப்படும் பொழுது அணிக்காக கொண்டு வருவேன்”

- Advertisement -

அவரும் சிறப்பாக ஆடினார்

“இந்த போட்டியில் நான் முதலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் 20 பந்துகளில் பந்தை கவனித்து விளையாடுவதற்கு நேரம் செலவிட்டேன். சில பந்துகளை சந்தித்த பிறகு எனது திறமையின் மேல் எனக்கு நம்பிக்கை வந்தது”

இதையும் படிங்க திலக் வர்மா கிட்ட கத்தி மயக்கமே வந்துடுச்சு.. ஆனா அதுக்கான காரணம் இதுதான்.. வேற வழி இல்ல – ஹர்திக் பாண்டியா பேச்சு

“அழுத்தமான நேரத்தில் விளையாடும் பொழுது முக்கியமானது உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதுதான். அதற்கான பலன் கிடைத்தது. நமன் நல்ல இன்டன்டட் காட்டி ஆரம்பத்தில் விளையாடினார். எங்களுக்குள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் வந்தது. அது மிகவும் முக்கியமாக இருந்தது. அதற்கான பாராட்டுகள் அவருக்கு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு நான் விளையாடிய விதம் சிறப்பாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -