கனொலி பிரியன்ஸ் ஆர்யா யார் அதிக சிக்சர் அடிக்கிறதுனு போட்டி.. அதுக்கு நான் தரப்போற பரிசு இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
32
Shreyas

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர்கள் கானலி மற்றும் பிரியன்ஸ் ஆர்யா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். இவர்களது பேட்டிங் அணுகுமுறை குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த ஜோடி நேற்று வெறும் 80 பந்துகள் மட்டும் விளையாடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பிரியன்ஸ் ஆர்யா 37 பந்தில் 93 ரன்கள் எடுக்க, கானலி 46 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் 254 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அசாதாரணமாக இருந்தது

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது “இவர்கள் இருவரும் விளையாடியதை பார்க்கும் பொழுது அசாதாரணமாக இருந்தது. நான் பார்த்த சில ஷாட்டுகள் வியப்பாக இருந்தது. பேக் புட்டில் வேகப்பந்துவீச்சாளர்களை நேராக சிக்ஸர் அடித்தது நம்ப முடியாதது. இது மிகவும் ஆபத்தானது ஆனால் அவர்கள் எளிதாக செய்தார்கள்”

” நான் இவர்கள் இருவரிடமும் ஐபிஎல் இறுதியில் யார் அதிகம் சிக்சர் அடிக்கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய பேட்டை பரிசாக தருவதாக சொல்லி பேசிக் கொண்டிருந்தேன். இருவருக்கும் அந்த போட்டியை வைத்திருக்கிறேன். என் பார்வையில் வீரர்களை சுதந்திரமாக விடும்பொழுது தான் அவர்கள் திறமை வெளிப்படும். எல்லோருக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. அதிலிருந்துதான் அவர்கள் வெளியில் வர முடியும். நானும் ரிக்கியும் அதிகம் வீரர்களிடம் எதையும் பேசுவதில்லை”

- Advertisement -

அனுபவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்

” எங்கள் அணியின் பெரும்பாலான பவுலர்கள் சர்வதேச அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் அணிக்காக நிறைய செய்திருக்கிறார்கள். எனவே அவர்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. சில பேட்ஸ்மேன்களுக்கு திட்டங்கள் தீட்டுவோம். அதை அவர்கள் சரியாக செய்வார்கள்; அவ்வளவுதான்”

இதையும் படிங்க : நான் சிக்ஸர் அடிக்க பிராக்டிஸ் பண்ணவே மாட்டேன் சார்.. செய்ற ஒரு விஷயம் இதுதான் – பிரியன்ஸ் ஆர்யா

“நாங்கள் இந்த நியூ சண்டிகர் மைதானத்தை எங்களுடைய கோட்டையாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். கடந்த வருடத்தில் இருந்தே இந்த மைதானத்தின் ஆடுகளத்தை எங்கள் பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு சாதகமாக எப்படி கொண்டு வருவது என்று யோசித்தோம். இப்போது எல்லாம் சரியாக செல்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -