நான் சிக்ஸர் அடிக்க பிராக்டிஸ் பண்ணவே மாட்டேன் சார்.. செய்ற ஒரு விஷயம் இதுதான் – பிரியன்ஸ் ஆர்யா

0
23
Arya

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய பஞ்சாப் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யா ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் ஆபத்தானது பேட்டிங் பயிற்சி முறைகள் பற்றி பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா மொத்தம் 37 பந்துகள் மட்டுமே சந்தித்து 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் கண்டுபிடிப்பு

கடத்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற டெல்லி பிரிமியர் லீக்கில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து பிரியன்ஸ் ஆர்யா கவனத்தைக் கவர்ந்து இருந்தார். இந்த நிலையில் பஞ்சாப் டிரையலில் இவரைப் பார்த்து ரிக்கி பார்த்தேன் ஒரு சில பந்துகளிலேயே இவரை தேர்வு செய்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா அதிரடி துவக்கம் கொடுத்து வருகிறார். அபிஷேக் ஷர்மா, வைபவ் சூரியவன்சி போல இவரது ஆட்டமும் குறைந்தபட்சம் 250 ஸ்ட்ரைக் ரேட் தாண்டி இருக்கிறது.

- Advertisement -

சிக்ஸர் அடிக்க பயிற்சி செய்வதில்லை

இதுகுறித்து பிரியன்ஸ் ஆர்யா பேசும்போது ” இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது. காரணம் நான் இன்று பவர் பிளே தாண்டி விளையாடி எனது அணிக்கு பங்களிப்பு கொஞ்சம் நிறைய செய்தேன். நான் சிக்ஸர் அடிப்பதற்காக அதிகம் பயிற்சி செய்ய மாட்டேன் சார். நான் பந்தை டைமிங் செய்யவே பயிற்சி செய்வேன்”

இதையும் படிங்க : 5 கப் சிஎஸ்கே மும்பை செய்யாத சாதனை.. ஸ்ரேயாஸ் கேப்டன்ஷியில் பஞ்சாப் மெகா ரெக்கார்டு.. புள்ளி பட்டியலில் அசத்தல்

“ஆனந்த் சார், பிர்லா அண்ணா மற்றும் எங்கள் அணியின் ட்ரையினர்கள் கடந்த ஆறு மாதமாக எங்களுடைய உடல் தகுதியில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அனுப்புவதை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம். கனொலி ரன் அடிக்காத போது நான் அமைதியாக இருந்தேன். காரணம் நான் அதிகம் பேசும் போது, எனக்கு அதிக எண்ணங்கள் வருகிறது. அதிகம் பேசாமல் இருந்தால் தெளிவான மனநிலையுடன் விளையாட முடிகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -