இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து எவ்வளவு பேசினாலும் அது போதாது என ஸ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டி முடிவுக்கு பின்னால் பேசியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 91 பதில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
விராட் கோலியிடம் மோதுவது கடினம்
விராட் கோலி கடந்த ஏழு போட்டிகளில் மொத்தம் நான்கு அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். தற்போது அவருடைய பேட்டிங் அணுகுமுறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தை விட தற்பொழுது தாக்கி விளையாடுவதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்.
இது குறித்து நியூசிலாந்து ஜெமிசன் கூறும் பொழுது “விராட் கோலி மிடில் ஓவர்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்தி மொத்தமாக தன் வசம் வைத்திருந்தார். இப்படிப்பட்ட மிகப்பெரிய வீரர்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் ஆட்டத்தை கட்டுப்படுத்துவார்கள். அவருக்கு எதிராக நீங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் உங்களுடைய அதிகபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டியது இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.
சொன்னதை செய்வார்
விராட் கோலி குறித்து பேசி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “அவரின் இன்னிங்ஸ் குறித்து எவ்வளவு பேசினாலும் அது போதாது. இதை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அவரும் இதை தொடர்ந்து செய்து வருகிறார். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடுவது, பந்துவீச்சாளரை நேரடியாக எதிர் கொள்வது என அவர் சொல்வதை எல்லாம் செயலில் செய்யக்கூடியவர்”
இதையும் படிங்க: தேவ்தத் படிக்கல் வரலாற்று சாதனை.. மும்பையை வெளியே அனுப்பி.. கர்நாடகா செமி பைனலுக்கு தகுதி – விஜய் ஹசாரே 2025
“இந்த வெற்றி இந்த தொடருக்கு சிறந்த ஒரு தொடக்கம். சில மாதம் கழித்து இந்திய அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய வீரர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது குறித்து அதிகம் நினைத்துக் கொண்டே இருந்தேன். தற்பொழுது மீண்டும் வந்ததை நல்ல முறையில் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






