150 கிமீ வேக பந்துகளை ஆடாதவர்கள்.. எனக்கு அறிவுரை கூறுவது எரிச்சல் ஊட்டுகிறது – ஸ்ரேயாஸ் ஐயர் காட்டமான கருத்து

0
2607

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவரது பலவீனம் குறித்து பேசுபவர்களை தனது கருத்துக்களின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் சீரற்ற பேட்டிங் ஃபார்ம் மற்றும் பிசிசிஐயின் சில அறிவுரைகளை ஏற்காத காரணத்தினால் அணியில் இருந்தும் சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு ரஞ்சி தொடர் மற்றும் விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் என உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது திறமையை நிரூபித்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரது தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் ஒரு பலவீனமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பந்துவீச்சுகளை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வரும் ஐயர் ஷார்ட் பந்துகளுக்கு மட்டும் தடுமாறி வரும் நிலையில் சில முன்னாள் வீரர்கள் அந்த வகையான பந்துகளை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி சொல்வது எரிச்சலை உண்டாக்குகிறது

இந்த சூழ்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொள்ளாதவர்கள் எனக்கு அறிவுரை சொல்வது எரிச்சல் ஊட்டக்கூடிய வகையில் இருப்பதாக சில காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறி வருகிறது.

இதையும் படிங்க:இதுவரை பார்த்தது ட்ரெய்லர்தான்.. இனிமேதான் கம்பீர் யாருன்னு காட்டுவார்.. அவர பத்தி எனக்கு தெரியும் – மெக்கல்லம் பேட்டி

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இதில் குறிப்பாக 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வரும் பந்துகளை விளையாடாதவர்கள் என்னை இப்படி விளையாடுங்கள் என்று அறிவுறுத்துவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் அது அவர்களின் கருத்து என்று நான் கூறுவேன். பேசுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அது அவர்களுக்குள் மட்டுமே பேசிக் கொள்ள வேண்டுமே தவிர வீரர்களிடம் தெரிவிக்க கூடாது. மேலும் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக நான் அடித்த 82 ரன்கள் எனது ஃபேவரிட். ஏனென்றால் அந்த சமயத்தில் நான் சிறப்பாக விளையாடவில்லை என்று அணியில் இருந்து நீக்கப்படுவேன் என ஒரு கருத்துக்கள் பரவிய நிலையில் நான் என்னால் முடிந்ததை கொடுக்க விரும்பினேன்” என்று கூறுகிறார்.

- Advertisement -