இந்திய அணி டி20 உலக கோப்பை வென்ற பிறகு ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலக அவருக்கு பிறகு கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில் இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் கம்பீர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் தலைமையில் தொடர்ச்சியான தோல்வி
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக விளங்கிய கௌதம் கம்பீர் கடந்த ஆண்டு கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை விட்டு விலக, கம்பீர் அந்த இடத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று பிசிசிஐ நம்பி அவரை பயிற்சியாளர் பதவியில் நியமித்தது.
டி20 கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டினை இந்திய அணி அவரது பயிற்சியின் கீழ் வெளிப்படுத்தி வருகிறது. எனவே அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒரு முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே கம்பீர் மீதான விமர்சனங்கள் ஓரளவு குறையும் என்பதால் இந்திய அணி வெற்றி பெரும் முயற்சியில் இருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்கல்லம் கம்பீர் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கௌதம் கம்பீர் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்றால், அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் வலிமையான ஒரு மனிதர். அவருடன் நான் முன்பு பணியாற்றியுள்ளேன். அவர் முன்பு எந்த ஒரு தலைமை பதவி வகித்தாலும் அவரால் நன்றாக சிறந்து விளங்க முடியும் என்பது எனக்கு தெரியும். அவர் இந்திய அணியுடன் இப்போதுதான் அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர் சிறந்து விளங்குவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க:பண்ட்க்கு 3 சான்ஸ் இருக்கு.. இதை சொல்லிட்டுதான் அவர் பேட் பண்ண வரணும் – சுரேஷ் ரெய்னா பேட்டி
இதைக் கண்டறிய ஒரு சிறந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பயிற்சியாளர் என்பது சரியான வார்த்தையா என்று கூட எனக்கு தெரியாது. ஏனென்றால் பயிற்சி அளிக்கும் விதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. மேலும் ஒவ்வொருவரும் தங்களது வித்தியாசமான முறையில் தனித்துவமாக இதனை செய்து வருகிறார்கள். எனவே கம்பீர் இனி சிறந்து விளங்குவார்” என்று கூறியிருக்கிறார்.