உண்மைய சொன்னா எனக்கு டீம்ல இடமே இல்ல.. நேத்து படம் பாக்கும்போது ரோகித் கால் பண்ணார் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
2544

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், கில் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட கிடைத்த வாய்ப்பு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 248 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட் மற்றும் முதல் போட்டியில் விளையாடிய ஹர்சித்ராணா மூன்று விக்கட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஜோடி ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவிலேயே வெளியேற காயமடைந்த விராட் கோலிக்கு பதிலாக அணியின் துணை கேப்டன் சுப்மான் கில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார். அவருக்கு அடுத்ததாக இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 56 ரன்கள் குவித்தார். கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான கூட்டணியால் இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணித்து இறுதியில் வெற்றி அடைந்தது.

- Advertisement -

விராட் கோலியால் வந்த அதிர்ஷ்டம்

இந்த சூழ்நிலையில் சமீப காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பாராத விதமாக இந்த போட்டியில் காயமடைந்த விராட் கோலிக்கு பதிலாக களம் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னை எவ்வாறு அணுகினார் என ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அக்சர் படேல் 5வதா இறங்க காரணமே இதுதான் – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

இதுகுறித்து ஐயர் விரிவாக கூறும்போது “எனக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது ரொம்ப வேடிக்கையான கதை ஆகும். நேற்று இரவு ஆர்வமாக ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் நன்றாக இருந்ததால் இரவை நீட்டிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்போது கேப்டனிடம் இருந்து வந்த போன் காலில் விராட்டுக்கு முழங்கால் வீக்கம் வந்துருச்சு. அதனால நீங்க விளையாடலாம்னு சொன்னார். அப்போதே உடனடியாக அனைத்தையும் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டேன். விராட் கோலிக்கு காயம் அடைந்ததால் இன்று விளையாட துரதிஷ்டவசமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -