அவ்வளவு ரன் அடிச்ச.. யாருமே கண்டுக்கல.. டீம்ல இருந்து கூப்பிட்டு பேசவே இல்ல – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
249
Shreyas

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 17வது ஐபிஎல் சீசன் சாம்பியன் பட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழி நடத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. அதே சமயத்தில் அவருடைய பெயர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இல்லை. தற்போது இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிடில் வரிசையில் வந்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிடில் வரிசையில் வந்து 500 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதற்கு அடுத்து அவரை மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யவில்லை. அணியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதே நேரத்தில் இந்திய நீங்கள் இருந்து வெளியேறிய அவர் தனது மும்பை மாநில அணிக்கு ரஞ்சி தொடரில் விளையாடவில்லை என்று சொல்லி, இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை அதிரடியாக சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றி தண்டித்தது. இதிலிருந்து மீண்டு வந்து தான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார்.

தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ” எனக்கு ஒரு மிகப்பெரிய உலகக்கோப்பை தொடர் இருந்தது. அது முடிந்ததும் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்பினேன். அந்த ஓய்வில் என்னுடைய உடல் தகுதியிலும் மேலும் நான் முன்னேற்றம் அடைய வேண்டிய பகுதிகளிலும் வேலை செய்ய நினைத்தேன். ஆனால் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து எனக்கு எந்த விதமான தகவல் தொடர்பும் இல்லாததால், எனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : யாரும் கவலைப்படாதிங்க.. இந்தியா பாக் போட்டிக்கு ஐசிசி கொடுத்த உத்தரவாதம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

எது நடந்தாலும் நாளின் முடிவில் என் கையில் பேட் இருக்கும். சிறப்பாக விளையாடுவதும் கோப்பைகளை வெல்வதும் என் கைகளில்தான் இருக்கிறது. ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் சிறந்த பதிலடியாக இருக்கும் என்று நம்பினேன். கடந்த காலத்தில் இதுவெல்லாம் சரியாக நடந்தது. எதிர்காலத்திலும் நிறைய கோப்பைகளை கைப்பற்ற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.