209 ரன்ஸ்.. இந்திய அணியின் மாஸ்டர் பிளான்.. வசமாய் சிக்கிய நியூசிலாந்து.. தொடரை வென்று அசத்தல்

0
0

இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்கள் அனைவரும் மீண்டும் சொற்ப ரன் எடுத்து ஏமாற்றம் கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் அக்சர் படேல் 46, இசான் கிஷான் 46 ரன்கள் எடுக்க இந்திய அணி 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மிட்சல் சான்ட்னர் மற்றும் ஜேக்கப் டப்பி இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அற்புதமான திட்டத்தால் தடுமாறினார்கள். இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து தொடர்ந்து 35 ஓவர்கள் வீசி பெரிய நெருக்கடியை உண்டாக்கினார். இதனால் நியூசிலாந்தால் ரன்கள் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த வலையில் சிக்கிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 187 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா மூன்று விக்கெட், முகமது சிராஜ் இரண்டு விக்கெட், யாஸ் தாகூர் மற்றும் ஆகிப் நபி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -