இந்திய கிரிக்கெட்

பிரித்வி ஷாவுக்கு ஒர்க் எத்திக்ஸ் இருக்கணும்.. ஆனா அந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்ல முடியாது – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

தன்னுடைய தலைமையின் கீழ் மும்பை மாநில அணியில் விளையாடும் பிருத்திவி ஷா வொர்க் எத்திக்சை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு சையத் முஸ்தாக் அலி தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி கைப்பற்றியது. இந்த தொடரில் பிரித் திவிஷா பேட்டிங் மிகவும் சுமாராகவே இருந்தது. கால் இறுதிப் போட்டியில் மட்டுமே குறிப்பிடும்படியான 49 ரன்கள் அவர் எடுத்திருந்தார்.

மோசமான 2024 ஆம் ஆண்டு

இந்த ஆண்டு தனிப்பட்ட முறையில் பிரித்திவி ஷாவுக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவருக்கு நல்ல ரஞ்சி சீசன் இருந்த பொழுதும் கூட, அவருடைய உடல் தகுதியை காரணம் காட்டி மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அவரே எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியாகவே அமைந்திருந்தது.

இந்த நிலையில் இதிலிருந்து அவர் மேல் அதற்குள்ளாக இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளில் ஒரு அணி கூட அவரை அடிப்படை விலையான ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வாங்க முன் வரவில்லை. ஐபிஎல் தொடரில் விற்கப்படாமல் போனது அவருக்கு எல்லாவற்றையும் விட பெரிய சோகமாக அமைந்தது. இதற்கு மிக முக்கியமாக அவர் தனது பணி செயல்முறைகளில் சரியாக இருப்பதில்லை என்பதுதான் அமைகிறது.

- Advertisement -

நான் வற்புறுத்த முடியாது

இந்த நிலையில் பிருத்திவிஷா குறித்து பேசி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “தனிப்பட்ட முறையில் அவருடைய திறமை அவருக்கு கடவுள் கொடுத்தது என்று நான் நினைக்கிறேன். அவரிடம் இருக்கும் அந்த திறமை வேறு யாரிடமும் கிடையாது. அவர் தன்னுடைய ஒர்க் எத்திக்ஸை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசி இருந்த பொழுதும் கூட இதையே கூறியிருந்தேன். அவர் மட்டும் அதைச் செய்தால் அவருக்கு வானம் தான் எல்லையாக இருக்க முடியும்”

இதையும் படிங்க : சிராஜின் சண்டை குணம் எனக்கு பிடிக்கும்.. வேற ஒரு காரணத்துக்கு அவர மதிக்கிறேன் – பும்ரா பேட்டி

“நீங்கள் இதற்காக அவரை கட்டாயப்படுத்த முடியுமா? என்றால் நிச்சயம் என்னால் எதற்காக அவரை வற்புறுத்த முடியாது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். மேலும் பலரும் அவருக்கு நிறைய உள்ளீடுகளை கொடுத்து இருக்கிறார்கள். கடைசியில் அவர்தான் சென்று தனக்கான விஷயங்களை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts