1.5 வருஷம்.. கஷ்ட நேரத்தில யாரும் உதவ வரவே இல்ல.. இனி என் கொள்கை இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
814
Shreyas

தற்போது மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கடினமான காலகட்டத்தில் யாரும் உதவ வரவில்லை என்பது குறித்து மிகவும் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது அக்சர் படேலை வைத்துக்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய அரைசதம் அடித்து இந்திய அணியை மீட்டார்.

- Advertisement -

நான் யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன்

இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “ஒரு தனி நபராக நான் இன்னொருவரை சார்ந்து இருப்பதை காட்டிலும், நானே பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது என்பது நிச்சயமாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு எதிராக உங்களை மட்டும்தான் நிறுத்திக் கொள்ள முடியும்”

“உங்களுடைய கடினமான காலகட்டங்களில் உங்களுக்கு யாரும் உதவ வரமாட்டார்கள். அப்படியான நேரத்தில் வரக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். நீங்கள் அவர்களை மிக நெருக்கமாக அறிவீர்கள். இந்த காரணத்தினால் நான் எப்பொழுதும் என்னை நம்பி ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும் என்னுடைய உள் உணர்வை ஆதரிக்கிறேன்”

- Advertisement -

திரும்பத் திரும்ப இதையே சொல்கிறேன்

“நான் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த விஷயங்கள் எனக்கு வாழ்க்கையில் நிறைய உதவுகிறது. அதோடு நான் என்னுடைய டெக்னிக்கில் வேலை செய்திருக்கிறேன். இதுகுறித்து நிறைய பேசியிருக்கிறேன். இருந்த போதிலும் நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். கடந்த கால எண்ணங்களில் குதிக்காமல் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி ஆடி இந்தியா தோத்தா தோக்கட்டும்.. எனக்கு இதான் வேணும் – அஸ்வின் பேட்டி

” நான் நேற்று பேட்டிங் செய்ய வந்த பொழுது முதலில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. எனவே அங்கிருந்து பொறுமையாக விளையாடி ரன்கள் எடுக்க வேண்டிய தேவை இருந்தது. அக்சர் மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்து விளையாடினார். நாங்கள் இருவரும் அனேகமாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்போம் என்று நினைக்கிறேன். பின்பு பவுண்டரிகள் வர ஆரம்பிக்க ஆட்ட வேகம் எங்கள் பக்கம் வந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -