வருண் சக்கரவர்த்தி ஆடி இந்தியா தோத்தா தோக்கட்டும்.. எனக்கு இதான் வேணும் – அஸ்வின் பேட்டி

0
1364
Ashwin

2025 நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் செமி பைனல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கட்டாயம் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டுமென ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்ற தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். எனவே இவர் குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

பும்ரா தரும் எக்ஸ்-ஃபேக்டர்

தற்போது மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட்டை உறுதியாக கைப்பற்றி தரக்கூடிய பும்ரா இல்லை. இதனால் எதிரணிகள் மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல முறையில் செட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பும்ராவிடம் இருக்கும் எக்ஸ்-ஃபேக்டர் கொண்ட ஒரு பவுலர் இந்திய அணிக்கு தேவையாக இருந்தது.

இதன் காரணமாகவே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் ஏற்கனவே நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்த போதும் ஐந்தாவது சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தார்கள். இவர் மர்ம சுழல் பந்துவீச்சாளர் என்பதும், மேலும் இவருடைய பந்துவீச்சை உலக கிரிக்கெட் அணிகள் பெரிய அளவில் சந்தித்தது இல்லை என்பதும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி கட்டாயம் ஆடணும்

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “கமெண்ட்ரி பாக்ஸில் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டுமா வேண்டாமா என்று இப்பொழுது பேச ஆரம்பித்து விட்டார்கள். பிளேயிங் லெவனில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை பார்த்ததும், இது எப்படி சரிவரும்? இத்தனை சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து சென்றால் சரி வராது என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வருண் சக்கரவர்த்தி சிறப்பான பந்து வீச்சால் இதை மாற்றி இருக்கிறார்”

இதையும் படிங்க : IND vs AUS.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. செமி பைனலில் ராணா ஆடுவாரா.. கம்பீர் பிளான் என்ன?

“தற்போது பிளேயிங் லெவனில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் போதாது என்று சொல்கிறார்கள். ஆனால் நான் வருண் சக்கரவர்த்தியை மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராகவே பார்க்கிறேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஹெட்டு விளையாடும் பொழுது நேராக சக்கரவர்த்தி கையில் புதிய பந்தை கொடுத்து வீசச் சொல்வேன். ஒருவேளை இவர் ஆடினால் இந்திய அணி தோற்றுவிடும் என்றால் பரவாயில்லை தோற்கட்டும். எனக்கு அவர் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -