இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயர்ஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயா தனது பேட்டிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அணியை விட்டு விலகல்
ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு காயம் மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் ஷாட் பால் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. மேலும் பிசிசிஐ உடன் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் சில காலம் இந்திய அணியை விட்டு விலகி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது இடம் பிடித்த ஐயர், அதிலிருந்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் மிடில் வரிசையில் களமிறங்கி இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அந்த சீசன் முடிவில் ஐயர் 243 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங் குறித்து அவர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எந்த அவசியமும் இல்லை
இதுகுறித்து அவர் கூறும் போது “நம்பிக்கையை பொறுத்தவரை எனக்கு நிறைய இருக்கிறது. எனது உள்ளூர் சீசனைப் பொறுத்தவரை பாருங்கள், நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கடினமான பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தேன், அது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. தொழில்நுட்ப ரீதியாக நான் ஒரு பரந்த நிலைப்பாட்டை பெறவும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்கவும் முடிந்தது. இது அந்த சக்தியை எனக்கு உருவாக்க பெரிதாக உதவியது.
இதையும் படிங்க:தோனி கேப்டனா இல்லனா.. எனக்கு அது நடக்க வாய்ப்பு இல்லை.. உலகின் சிறந்த கேப்டன் அவர் – சிஎஸ்கே முன்னாள் வீரர்
இங்கிலாந்து உள்நாட்டு தொடரிலும் அதன் பிறகு நடைபெற்ற லீக் ஆட்டங்களிலும் என்னால் பிரதிபலிக்க முடிந்தது. நான் யாருக்கும் எனது திறமையை நிரூபிக்கவோ எந்த செய்தியையும் அனுப்ப வேண்டியது இல்லை. நான் இப்போது செய்ய வேண்டியது எல்லாம் என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த கிரிக்கெட் விளையாடுவதுதான். அவ்வாறு நான் சிறப்பாக விளையாடினால் செய்தி தானாகவே எனக்கு வந்து விடும்” என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார். அதாவது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் அவருக்கான இடம் தானாக கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.






