இந்திய கிரிக்கெட்

என்னை பத்தி நியூஸ் போடறதுக்கு முன்னாடி.. கொஞ்சமாவது இதை செய்யுங்க – ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டுகோள்

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னைப் பற்றியான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என சமூக வலைதளத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சித் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி வந்து சதங்கள் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய உடல் தகுதி குறித்து சில செய்திகள் சமூக வலைதளத்தில் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு டெக்னிக் பிரச்சனையால் பல பிரச்சனை

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்து விளையாடுவதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் அப்படியான பந்தை அதிகம் எதிர்பார்த்து கிரீசில் நிற்கிறார். அந்த நேரத்தில் அவர் விளையாடுவதற்கு சுலபமான பந்துகள் வந்தால் கூட, அவர் ஷார்ட் பந்துக்கு காத்திருப்பதால் அவருடைய நேரம் தவறுகிறது. இதனால் அவர் ஆட்டம் இழக்க வேண்டி இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டார். மேலும் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். தற்போது மீண்டும் நல்ல நிலைக்கு வந்திருக்கும் அவர் தன்னுடைய உடல் தகுதி பற்றி தவறான விஷயங்களை வெளியில் பரப்ப வேண்டாம் என சமூக வலைதளத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பரவிய பொய் செய்தி

ரஞ்சி டிராபி தொடரில் அடுத்த திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்கின்ற செய்திகள் பரவியது. இப்படியான ஒரு செய்திக்கு பதில் அளித்த ஸ்ரேயாஸ் ஐயர் “நண்பர்களே இப்படியான செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக கொஞ்சமாவது ஹோம் ஒர்க் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : நாளை நியூஸி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 முக்கிய மாற்றங்கள்.. வெற்றிக்கு குறி

மேலும் தனது உடல் தகுதி குறித்து பேசி இருக்கும் அவர் “வெளியில் மக்கள் என்ன பேசிக் கொண்டாலும் நான் என் உடலை கேட்க வேண்டும். நான் கடந்த காலத்தில் இருந்து நிறைய சுமைகளை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்.எனக்கு எவ்வளவு சுமக்க முடியும் என்கின்ற அளவு தெரியும். அதன் அடிப்படையில் நான் முடிவுகள் எடுப்பேன். ஆனால்இப்பொழுது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். நான் செய்ய விரும்புவதை செய்கிறேன். எனவே பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shreyas Iyer

Recent Posts