ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் நடுவரை மிரட்டி வெற்றி பெற வைத்தார்களா?.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை – கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது

0
0

​மழை காரணமாக 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான டி20 போட்டியில், அம்பயர் வழங்கிய வைடு தீர்ப்பை இந்திய கேப்டன் மற்றும் பவுலர் தலையிட்டு மாற்றச் செய்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

​இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஜப்பான் அணி 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஜப்பான் அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டபோது, அக்சர் பட்டேல் அந்த ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

- Advertisement -

​அக்சர் பட்டேல் வீசிய பந்தை ஜப்பான் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றபோது பந்து லெக் சைடில் சென்றதால் அம்பயர் அதை வைடு என அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த பவுலர் அக்சர் பட்டேல் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடனடியாக அம்பயரிடம் சென்று கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.

​இதுகுறித்து போட்டிக்குப் பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் “5 ஓவர் மேட்ச் என்பது எந்தப் பக்கமும் திரும்பக் கூடியது, ஆனால் ஜப்பான் அணி காட்டிய ஆட்டம் மற்றும் அவர்களின் ஆட்டிடியூட் மிகவும் அற்புதமாக இருந்தது. நிச்சயமாக அவர்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள், எங்களுக்கு இந்த விக்கெட்டில் ஆடியது ஒரு நல்ல பிராக்டிஸ் ஆக அமைந்தது” என்று கூறினார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “பந்து சதுரமாக டர்ன் ஆகியதுடன், பிட்ச்சும் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது, எனவே நான் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் மட்டுமே அடிக்க முடிவு செய்து பந்தின் மெரிட்டிற்கு ஏற்றவாறு ஆடினேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அடுத்த பந்து வீசப்படுவதற்கு முன்பாக அம்பயர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள கிரிக்கெட் விதியில் இடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய வீரர்கள் நியாயமான முறையில்தான் முறையிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -