“இரண்டு அணிகளை உருவாக்குவதில் இந்தியாவைப் பின்பற்ற வேண்டுமா”‘?என்ற கேள்விக்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரரின் கடுமையான பதில்!

0
246

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடர்களில் ஆடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . இன்று இரண்டாவது டி20 போட்டி உத்திர பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது .

இந்திய அணியானது சமீப காலமாக ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு என இரு வேறு அணிகளுடன் களம் இறங்கி வருகிறது . குறிப்பாக ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாவும் அணியை வழி நடத்தி வருகின்றனர் . மேலும் கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணி இரு வேறு அணிகளை கொண்டு போட்டிகளில் ஆடி வந்ததும் குறிப்பிடத்தக்கது . இதனால் நிறைய வீரர்கள் சர்வதேச அனுபவம் கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது

- Advertisement -

இந்திய அணியின் டி20 உலக கோப்பை போட்டியின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்த அணுகுமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் மற்றொரு புறம் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட தொலைநோக்கு திட்டத்திற்கு பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னால் வீரர்களும் தங்களின் பாராட்டுகளையும் தெரிவிக்க தவறவில்லை .

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல் இது பற்றி பாகிஸ்தான் அணியுடன் தொடர்புடைய ஒரு கேள்விக்கு செய்தியாளர்களிடம் கடுமையாக பதில் அளித்து இருக்கிறார் . இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் கம்ரான் அக்மலிடாம்” பாகிஸ்தான் அணியும் இந்தியாவை போல் இரண்டு அணிகளை களம் இறக்கி சர்வதேச போட்டிகளில் ஆடலாமா?” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அக்மல்” முதலில் நாம் ஒரு அணியை முழுமையாக தயார் செய்வோம் அதன் பிறகு இரண்டு அணிகளை பற்றி யோசிக்கலாம் என்று காட்டமாக பதில் கூறினார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்” 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் டிபார்ட்மெண்ட் கிரிக்கெட் நல்ல அளவில் இருந்தது . அப்போதே நாம் முயற்சி செய்திருந்தால் நம்மால் இரண்டு அல்லது மூன்று அணிகளை கட்டமைத்திருக்க முடியும் என்று தெரிவித்தார் .

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய கம்ரான் ” ஆறு அணிகளை மட்டுமே வைத்துக் கொண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல . மேலும் இப்படி 6 அணிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடி இருந்தால் பவாத் ஆலம் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்ப வந்திருக்க முடியாது எனக் கூறி முடித்தார் .

பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை எண் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது ஆனால் இரண்டு போட்டிகளிலுமே இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது . இது தவிர உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களையும் அந்த அணி இழந்தது குறிப்பிடத்தக்கது .