ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய கோப்பைக்கு இறுதியாக சரியாக செல்லவில்லை என்றாலும் கூட, ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் உலகக் கோப்பை தொடரில் சிறந்த அணியாக இந்திய அணி இருந்தது. சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மாவும் இருந்தார்.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்களா என்கின்ற பெரிய கேள்வி இருந்து வருகிறது.
ரோகித் சர்மா இனி எந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்திலும் விளையாடவில்லை என்று தேர்வுக்குழு இடம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வந்தன. விராட் கோலி இது சம்பந்தமாக என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது குறித்து தெரியாது.
மேலும் பிசிசிஐ தரப்பில் இவர்கள் இருவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடுவது பற்றிய முடிவுக்கு, இவர்கள் இருவருமே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே பிசிசிஐ இவர்களை நீக்கம் செய்யாது.
அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பைத் தொடர் இருக்கின்ற காரணத்தினால் இதற்காக அணியை தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. மேலும் இந்திய அணியின் கையில் 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இருக்கிறது. எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து தெளிவான முடிவுகள் தேவைப்படுகிறது.
இவர்கள் இருவரின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் பற்றி பேசி உள்ள ஆசிஷ் நெக்ரா “விராட் கோலி ஒரு காலண்டர் ஆண்டில் 800 முதல் 1000 ரன்கள் அடிக்கிறார். ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் விதத்திற்கு எந்த தேர்வாளர்களும் அவரை தேர்வு செய்ய ஆசைப்படுவார்கள்.
விராட் கோலியும் ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாட விரும்புகிறார்களா இல்லையா என்பது குறித்து என்ன அவர்கள் விவாதித்தாலும் சரி, ஒருவேளை அவர்கள் விளையாடவில்லை என்று ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் சரி, அதை நான் நம்ப மாட்டேன்.
ஏனென்றால் இவர்கள் இருவருமே சிறப்பாக ரன்கள் குவிக்கும் வரை எந்த கிரிக்கெட் வடிவத்திலும் விளையாடுவதற்கு தகுதியானவர்கள். இப்பொழுது ரன்கள் அடித்துக் கொண்டிருக்கிற காரணத்தினால் இவர்கள் தொடர்ச்சியாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!






