பாபர் அசாம் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பார் – ஷோயப் அக்தர் உறுதி

0
157
Shoaib Akhtar about Babar Azam IPL Auction price

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒரே ஒரு ஆண்டு அதாவது ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டு மட்டும் விளையாடினர். அதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு பிசிசிஐ அனுமதி மறுத்தது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடத்தில் மொத்தமாக 11 பாகிஸ்தான் வீரர்கள் 8 அணிகளுக்கு விளையாடினர். அதில் ஆல்ரவுண்டர் வீரர் ஷாகித் அப்ரிடி அதிகபட்சமாக 2 கோடியே 71 லட்ச ரூபாய்க்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணி மூலமாக கைப்பற்றப்பட்டார். அந்த ஒரு ஆண்டு மட்டும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினர். அதன் பின்னர் தற்பொழுது வரை பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை.

இருப்பினும் பாகிஸ்தான் அணியை சேர்ந்த மஹ்மூத் 2012 மற்றும் 2013-ம் ஆண்டு பஞ்சாப் அணியிலும்,2015 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடினார். 2011 ஆம் ஆண்டு அவர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெற்ற பிறகு அவரை ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பாபர் அசாம் 15 கோடிக்கு மேல் ஏலம் போவார்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பாபர் அசாம் தற்பொழுது உள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தற்போது கராச்சி அணியை தலைமை தாங்கி விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான கராச்சி அணி 2020 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக மட்டுமின்றி வீரராக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் குவித்த ஒரே வீரர் பாபர் அசாம் தான். 66 இன்னிங்ஸ்களில் 23 அரைச் சதங்களுடன் மொத்தமாக 2413 ரன்கள் இதுவரை அவர் குவித்திருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 42.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 121.13 ஆகும்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடத்தில் கொல்கத்தா அணிக்கு விளையாடி இருந்தார். அவர் தற்பொழுது “ஐபிஎல் ஏலத்தில் பாபர் அசாம் பெயர் வாசிக்கப்பட்டால், 15 முதல் 20 கோடி ரூபாய் வரை அவர் நிச்சயமாக ஏலம் போவார். டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வரும் அவரை நிச்சயமாக மேற்குறிப்பிட்ட தொகை கொடுத்து ஏதேனும் ஒரு அணி வாங்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அப்படி அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினால் விராட் கோலி உடன் இணைந்து விளையாட வேண்டும். குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஒரே அணியில் விளையாட வேண்டும் என்று தன்னுடைய ஆசையை ஷோயப் அக்தர் தற்பொழுது தெரிவித்துள்ளார்.