ஹர்திக் ஒண்ணும் பெரிய ஆள் கிடையாது.. எங்க பிளேயர்தான் இதுல பெரிய ஆள் – அக்தர் பேச்சு

0
164
Akthar

இந்திய அணியின் வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாத் மிக சிறந்தவர் என்று சோயப் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சோயப் அக்தர் மற்றும் முகமது ஹபீஸ் இருவரும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வாறான விவாதம் நடைபெற்றது. இதில் அக்பர் கூறிய கருத்தை ஹபீஸ் ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தந்த வசதி

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் விளையாடியது. துபாய் மைதானத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பொதுவாக பந்துவீச்சுக்கு சாதகம் இருந்தது. இந்திய அணி நிர்வாகம் தங்களிடம் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழல் பந்துவீச்சாளர்களை அதிகம் நம்பியது.

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது. ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நம்பி இருந்தது. அவரும் இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை ஏமாற்றாமல் போட்டியின் எல்லா பாகத்திலும் பந்து வீசக்கூடியவராக அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்துல் ரசாக்தான் சிறந்தவர்

இதுகுறித்து சோயப் அக்தர் கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா மால்கம் மார்ஸல், அப்துல் ரசாக் மற்றும் ஸ்ரீநாத் போன்ற வீரர் கிடையாது. ஆனால் அவர் தன்னை அப்படியான ஒரு வீரராக நினைத்துக் கொள்கிறார். நீங்கள் புதிய பந்து அல்லது பழைய பந்து எதைக் கொடுத்தாலும் அவர் போட்டியின் எல்லா பக்கத்திலும் பந்து வீசுகிறார். மேலும் அவர் மிகவும் சக்தி வாய்ந்த ஹிட்டரும் கிடையாது. ஆனால் உலகம் உங்களுக்கான மேடை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். அதில் அவர் தன்னுடைய திறமைகளை சந்தைக்கு கொண்டு வருகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஃபெராரி காரில் ஆறு கியர் இருக்கலாம்.. உம்ரான் மாலிக் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் – டேல் ஸ்டெய்ன் கருத்து

இதை ஏற்றுக்கொண்டு பேசிய முகமது ஹபீஸ் கூறும்பொழுது “நான் அக்தர் கூறிய கருத்தில் உடன்படுகிறேன். நீங்கள் அப்துல் ரசாக் செய்த விஷயங்களின் புள்ளி விபரங்களை எடுத்துப் பாருங்கள். அவை மிகப்பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நமது கிரிக்கெட் சிஸ்டம் அதை கண்டு கொள்ளவில்லை. அவரும் தன்னுடைய திறமைகளை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொண்டு மேம்படுத்திக் கொள்ளவில்லை. எப்படி எடுத்துக் கொண்டாலும் ஹர்திக் பாண்டியாவை விட அப்துல் ரசாக் சிறந்தவராக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -