இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக கவனம் ஈர்த்த உம்ரான் மாலிக் பந்துவீச்சில் சரிந்தது ஏன் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு லெஜன்ட் டேல் ஸ்டெய்ன் கூடியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் அதிவேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் கவர்ந்தவராக உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் உருவானார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் உடனே இடம் கிடைத்தது. ஆனால் தனது வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து இந்திய அணிகளும் ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்தார்.
2022-ல் அசத்தல் செயல்பாடு
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2022 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்திருந்தார். அதற்குப் பிறகு இந்திய அணிகளும் இடம் கிடைத்தது. அங்கு பத்து வெள்ளைப் பந்து போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றினார். இருந்தபோதிலும் அவர் ரண்களை அதிகம் விட்டுத் தருவதால் வாய்ப்பை இழந்தார். இந்த காலகட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சு பயிற்சியாளராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உம்ரான் மாலிக் பற்றி டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” ஃபெராரி காரில் ஆறு கியர்கள் இருந்த பொழுதும் கூட நீங்கள் அவற்றை மொத்தமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் முதல் மூன்று கியர்களை பயன்படுத்தி மட்டுமே அந்த வண்டியை செலுத்த முடியும். அதேபோல்தான் வேகப் பந்துவீச்சாளர்களும் இருக்க வேண்டும். அவர்களுக்கு தங்களது கியர்களை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்”
வேகத்தால் மட்டும் சாதிக்க முடியாது
“சில நேரங்களில் ஐபிஎல் மாதிரியான பெரிய தொடர்களில் பந்து வீசக்கூடிய இளம் பந்துவீச்சாளர்களுக்கு தங்களை சுற்றி என்ன நடக்கிறது தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. மைதானத்தில் இருக்கும் 60,000 மக்கள் கோஷமிட, இவர்கள் 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதற்கு மட்டுமே முயற்சி செய்து தோற்றுப் போகிறார்கள்”
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் கோப்பையை வென்றாச்சு.. கையோடு இதையும் பண்ணிடுங்க.. இவங்க எல்லாம் பாவம்.. கவாஸ்கர் கோரிக்கை
“இப்படி இருந்தால் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். ஒரு சீசனுக்கு பிறகு உங்களை எந்த அணியும் கண்டுகொள்ளாமல் போகலாம். எனவே உங்களிடம் இருக்கும் வேகத்தை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.