பும்ரா குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட வேண்டும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.
தற்போது உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் பும்ராவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட வேண்டும் என அக்தர் கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அது குறித்து காரணத்தையும் அவர் விளக்கி இருக்கிறார்.
நியூசிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இதில் இந்திய அணி ஒயிட் வாஸ் ஆகியது. இந்தத் தொடரில் பும்ராவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக கொடுக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இதை உதாரணமாக வைத்து அக்தர் பேசி இருக்கிறார்.
பும்ரா குறித்து அக்தர் கூறும் பொழுது “உங்களுக்கே தெரியும் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நேரம் பந்து வீச வேண்டும். உங்களை பேட்டர்கள் தாக்கி விளையாட வர மாட்டார்கள்.எனவே உங்களுடைய லென்த்தில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு விடும். பந்து சீம் ஆகவில்லை என்றால் நீங்கள் போராட ஆரம்பிப்பீர்கள். அணி கேள்வி கேட்க ஆரம்பிக்கும்.இருந்தபோதிலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தக்கூடிய அளவில் இருக்கிறார்”
நானாக இருந்தால் இதை செய்வேன்
“நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவரால் அதிகம் செய்ய முடியவில்லை. மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பினால் அவருடைய வேகத்தை அவர் அதிகரிக்க வேண்டும். அப்படி அவர் வேகத்தை அதிகரித்தால் அவர் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. நான் அவருடைய இடத்தில் இருந்தால் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே கவனம் கொடுப்பேன்”
இதையும் படிங்க : ஆஸி 3வது டெஸ்ட்.. ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க.. இதுதான் முக்கிய காரணம் – சஞ்சய் பாங்கர் பேட்டி
“குறுகி வடிவ கிரிக்கெட்டுக்கு அவர் சிறந்த பவுலர். லைன் மற்றும் லென்த்தை நல்ல முறையில் புரிந்து கொள்கிறார். அவருடைய துல்லியம் புத்திசாலித்தனமானது. பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர் என இரண்டு பகுதியிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். மேலும் அவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும்” என்று கூறியிருக்கிறார்.






