ஆஸி 3வது டெஸ்ட்.. ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க.. இதுதான் முக்கிய காரணம் – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
289

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குறிப்பாக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டதால் தோல்வியை தவிர்க்க முடியாத நிலை உருவானது. சமீப காலங்களில் இந்திய அணியின் தொடக்க வரிசை சொதப்பினால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அணியை கரை சேர்ப்பார்கள்.

சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் ஓரளவுக்கு இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது போட்டியில் அஸ்வின் என வாய்ப்பு கொடுக்கப்பட்டு மூன்றாவது போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வாய்ப்பு கொடுத்ததில் மகிழ்ச்சி

இதுகுறித்து அவர் கூறும் போது “ஜடேஜா எப்போதுமே வெளிநாட்டு சூழ்நிலைகளில் முதல் தேர்வு சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். அங்கு தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிகமான டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து நான் சற்று ஆச்சரியப்பட்டேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் அந்தத் தொடருக்கும் தற்போது நடைபெற்று வரும் தொடருக்கும் நிலைமைகள் முற்றிலும் வேறானவை.

இதையும் படிங்க:7 போர் 10 சிக்ஸ் 117 ரன்.. ரீசா ஹென்றிக்ஸ் அபார ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி 2வது டி20யில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

முதல் இன்னிங்ஸில் அதிக வேலை செய்ய அவசியமில்லாத ஜடேஜா போன்ற ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பேட்ஸ்மேன் ஆக அவரது சாதனை இன்னிங்ஸில் கீழ் வரிசையில் அணி அதிக ரன்கள் பெற பயனுள்ள வகையில் அமைகிறது. இது ஒரு வெளிநாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது” இன்று சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -