நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்று இன்று மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் முக்கியமான ஒரு பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சிறிய அணியான அமெரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இது பாகிஸ்தான் அணியும் தாண்டி மற்ற கிரிக்கெட் ரசிகர்களையும் கூட அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மேலும் இன்று பாகிஸ்தான அணி இந்திய அணிக்கு எதிராக தோல்வியடையும் பட்சத்தில், அமெரிக்க அணி அயர்லாந்து அணியை வென்றால், பாகிஸ்தான் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறும் சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் கூறும் பொழுது ” பாகிஸ்தான் அணி மேற்கொண்டு தோல்வி அடைந்தால், அமெரிக்கா அணி அயர்லாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும். இதன் காரணமாக அடுத்த சிறிய அணிகள் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றில் விளையாடும். அப்படி தகுதிச் சுற்றில் பாகிஸ்தான் அணி விளையாடினால் அதைவிட பெரிய அவமானம் எதுவும் கிடையாது. பாபர் சில மேஜிக்கை உருவாக்கி அணியை மீட்டுக் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க : பாபர் கிடையாது.. இந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்தான் இந்தியாவுக்கு பிரச்சனை – ஹர்பஜன் சிங் அறிவுரை
இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் போட்டியாளர்களில் வலிமையான ஒரு அணியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இது ஒரு கடினமான போட்டியாகும். ஆனாலும் இரு அணிகளும் ட்ராப் இன் ஆடுகளத்தில் விளையாடுகின்றன. இங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. பாகிஸ்தான் அணி எப்பொழுதும் தோல்வியடையும் பொழுதும் மீண்டும் வந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்த முறையும் அது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.